OYO Rooms Startup Story

OYO Rooms Startup Story
கல்லூரிப் படிப்பினை வெறும்பாதியில் விட்டுவிட்டு, 19 வயதிலேயே தன்னுடைய ஹோட்டல் பிசினஸ்சினை தொடங்கி , 22 வயதில் மில்லியனராகி , ஐந்து வருடங்களிலேயே "3rd world largest hotel chain” என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகி, இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்! ஒரு நாளில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டும் லட்சம் பேர் இவரது ஹோட்டல்களில் தங்குகின்றனர். இவர்தான் “Oyo rooms" founder ரித்தேஷ் அகர்வால்!

யார் இந்த ரித்தேஷ் அகர்வால் ? இந்தியாவில் நக்ஸல்ஸ் நடமாட்டம் அதிகமுள்ள ஒரிசாவில் பிஸ்ஸம் கட்டாக் என்கிற ஓர் சிற்றூரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் ரித்தேஷ் ஒருநாள் ரித்தேஷ் பாடசாலையில் இருந்து திரும்பும்போது , அவரது அக்கா ஒரு கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு வந்திருந்தார். எங்கே போனாய் என ரிதேஷ் கேட்க, “நான் entrepreneur festival போனேன்' என்றாராம் அக்கா . அப்படியென்றால் என்ன என Google செய்து பார்த்திருக்கின்றார் அந்த பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவனான ரிதேஷ் அந்த வார்த்தைக்கு அப்போது அவருக்கு அர்த்தம் புரிந்ததோ இல்லையோ ஆனால் அதன்மீது பெரும் ஈர்ப்பிருந்தது சில நாட்களின் பின் பாடசாலையில், ஆசிரியர் மாணவர்களிடம் எதிர்காலத்தில் நீங்கள் எல்லோரும் என்னவாக ஆசை என கேற்க, வழமைபோல் அவர்களும் டாக்டர் என்ஜினீயர், வக்கீல், போலீஸ் என சொல்லிக்கொண்டே செல்ல ரிதேஷ் மட்டும் entrepreneur என கூற, அடுத்த நொடியே எல்லோரது பார்வையும் ரிதேஷ் மீது பதிய, அந்த வினாடிகள்தான் பின்னாளில் கண்டிப்பாக தான் ஒரு தொழில் முனைவோனாக வரவேண்டும் என்கிற எண்ணத்தினை விதையுரைச் செய்ததாம் ரித்தேஷிடம்.

ஆசைப்பட்டது மட்டுமன்றி தனது பதின் மூன்றாவது வயதிலேயே sim card விற்று அதில் ஓரளவு லாபமும் ஈட்டியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள கோட்டா உயர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒவ்வொருவாரமும் டெல்லிக்கு பயணமாகி, அங்கு எங்கெல்லாம் " entrepreneur festival" நடக்கின்றதோ அங்கே சென்றுவிடுவார். அதில் கலந்துகொண்டு ஒவ்வொரு தொழில் முனைவோரின் மற்றும் பிசினஸ் செய்வோரின் வெற்றிக்கதைகளை கேட்டுக்கொண்டிருப்பார். அந்த entrepreneur success stories ஒவொன்றும் ரித்தேஷ் மனதில் ஆழமாய் பதிய அவர் ஒன்றை புரிந்துகொள்கின்றார் , நடப்பில் உள்ள கல்வித் திட்டமானது நடைமுறை வாழ்கைக்குத் தேவையான எல்லாவற்றையுமே கற்றுக்கொடுக்கப்போவதில்லை என்பதை . அதன்பின்னர் டெல்லியிலேயே அதிக நாட்களை செலவிட்ட ரித்தேஷ் பரீட்சை காலத்தில் மட்டும் கல்லூரிக்கு சென்று தேர்வுகளை எழுதிவிடுவார். இடையிடையே ஏதாவது பகுதிநேர வேலை பார்த்து அந்த பணத்தில் பல இடங்களுக்கு பயணமானார். இந்த பயணங்கள் மூலமாகவே அவர் நிறைய வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொண்டார். உத்தரகாண்டம் முதல் இமாச்சலம் வரை ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நூறு இடங்களுக்குமேல் பயணமாணவர் , இருநூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்கினார். இம்மாதிரியான பயணங்களின் போது தங்குமிடங்களில் அவர் ஓர் விடயத்தினை அவதானித்தார். சில ஹோட்டல்களில் வழங்கப்படும் சேவை தரமானதாக இருக்கும், ஆனால் அங்குள்ள அறைகள் எல்லாமுமே நிரம்பியிராது. சில ஹோட்டல்களில் சேவை படு மோசமாக இருக்கும் எனினும் எல்லா அறைகளும் புக் செய்யப்பட்டிருக்கும். இந்த பிரச்சினைக்கான தீர்வு அப்போது அவருக்கு புரிந்திருக்கவில்லை .

இம்மாதிரியான நிறைய பயணங்களை மேற்கொண்டவாறே ஒவ்வொரு ஊரிலும் உள்ள என்ஜினீயர் கல்லூரிகளை ஆராச்சி செய்து புத்தகமொன்றினையும் தனது பதிலேழாவது வயதில் எழுதி முடிக்கின்றார். ''இந்த வயதில் பிசினஸ் வேண்டாம் படிப்பை தொடர்' என்ற பெற்றோரின் வற்புறுத்தலால் படிப்பை தொடர்ந்தாலும் ,பயணங்கள் மேற்கொள்வதை அவர் நிறுத்தவில்லை. அப்போதும், நல்ல ஹோட்டல் சேவை கிடைக்காமல் அவதியுறுகின்றார். ஆகவே இந்த பிரசசினைக்கு நாம் ஏன் ஓர் தீர்வுகாணக்கூடாது? என எண்ணி "Oravel stays" என்கிற இணைய தளத்தினைனை ஆரம்பித்தார். Oravel என்றால் என்னவென்றால் பயணிகளுக்கு குறைந்த பட்ஜெட்டில் அப்பார்ட்மென்ட்களில் இரவு தங்க ஒரு கட்டில், மற்றும் காலை உணவு. எனினும் அவர் எதிர்பார்த்ததைப்போல் இந்த பிசினஸ் வெற்றியளிக்கவில்லை

இந்த கால கட்டத்தில் அவர் ''thiel fellowship' பற்றி கேள்விப்படுகின்றார். • Peter thiel, இவர் யார் என்றால் "Paypal" நிறுவனத்தின் founder களுள் ஒருவர், மேலும் mark Zuckerberg Facebook நிறுவனத்தினை ஆரம்பித்தபோது, அது கண்டிப்பாக வெற்றியடையும் என அதில் நிறைய முதலீடுகளை செய்தவர். Peter thiel அவர்களுடையதுதான் இந்த "thiel fellowship". உலகத்தில் உள்ள இருபது பேருக்கு நேரடியாக பயிற்சி கொடுப்பதோடு, ஏதாவது பிசினஸ் செய்ய அல்லது வித்தியாசமான அவர்களது ஐடியாக்களை பரீட்சித்துப்பார்க்க ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பணமும் கொடுப்பார்கள். ஆனால், இதில் சேரவேண்டும் என்றால் இரண்டு கண் டிஷன்கள் உண்டு முதலாவது, விண்ணப்பிப்பவர் இருபது வயதுக்குள் இருக்கவேண்டும் (இப்போது இது இருபத்தியிரண்டு வயதாக மாற்றப்பட்டுள்ளது ) மற்றையது ஸ்கூல் அல்லது கல்லூரி முடித்திருக்கவேண்டும்.

இது பற்றிய விடயங்களை கேள்விப்பட்ட ரித்தேஷ் விண்ணப்பிக்க நினைத்தபோது ஒரு பிரச்சினை என்னவென்றால் அன்று ஜனவரி 1. ஆனால், விண்ணப்பிப்பதற்கான இறுதித் திக்கி டிசம்பர் 31 அடுத்தநாள் தானாகவே இணையத்தில் இருந்து அந்த விண்ணப்பப்படிவம் நீங்கிவிடும் வகையிலேயே அமைந்திருக்கும். ஆனால் ரிதேஷின் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுத்தது, ஏனெனில் IST அதாவது இந்திய நேரத்தின்படி அன்று ஜனவரி 1, ஆனாலும் சான்பிரான்சிஸ்கோவில் PST, அங்கு இன்னும் டிசம்பர் 31 விடுவாரா ரித்தேஷ் மளமளவென்று படிவத்தினை நிரப்பியனுப்பி, நேர்முகத் தேர்வுகளிலும் கலந்து கொண்டு அதில் தேர்வாகியும் விடுகின்றார். Peter thielலிடம் நேரடியாக பயிற்சிபெற்றுக்கொள்ளும் ரிதேஷ், அதே உற்சாகத்துடன் இந்தியா திரும்பிவருகின்றார் தொழில் தொடங்க. இந்தியாவில் பட்ஜட்டுக்கு ஏற்ற தங்குமிடவசதி கிடைப்பதில் சிரமம் இருப்பதனை உணர்ந்திருந்த ரித்தேஷ் இதற்கான தீர்வாக'' Oyo rooms ''என்ற startupஐ may 2013 ல் தொடங்குகின்றார்.

OYO Rooms Startup Story
இணைய பக்கத்தில் காட்டப்படும் விடுதியே நேரிலும் இருக்கும் என நூறுவீதம் உறுதியாக கூறவியலாது. இந்தியாவில் அறைகளை தேர்வு செய்ய உதவும் இணையதளங்கள் தரத்திற்கான உத்தரவாதத்தினை அளிப்பதில்லை. அதற்கான உத்தரவாதத்தினை சுற்றுலா செல்வோரிடம் வழங்குவது எப்படி? யோசித்த ரித்தேஷ் , தங்குமிடங்களை புக் செய்வோர் சந்திக்கும் இடர்களை களைந்து வரைமுறைப்படுத்தி வலைத்தளம் மூலம் சென்றடையச் செய்தால் வெற்றி பெறலாம் என எண்ணி தனது Oravel பக்கத்தினையே "Oyo rooms" என பெயர் மாற்றம் செய்து புது வடிவம் கொடுத்தார் . விடுதிகளுடன் கைகோர்த்து இந்தியாவின் அனைத்து நகரங்களிழும் Oyo rooms புக் செய்வோருக்கு பஜட் விலையில் சேவையினை வழங்குவது இதன் நோக்கம் ஹரியானாவின் குர்கான் பகுதியில் உள்ள ஒரேயொரு ஹோட்டலுடன் செயற்பட ஆரம்பித்த Oyo தற்போது இந்தியாவின் 260 நகரங்களில் 8500 ஹோட்டல்களுடன் இணைந்து சுற்றுலாவாசிகளுக்கு சேவையினை வழங்குகின்றது . Oyo என்பதன் அர்த்தம் "on your own room” என்பதாகும்

நமது விருப்பத்திற்கேற்ப ஒன்று என்ற சிந்தனையின் மூலம், "டிவி ரிமோர்ட்'' என்று இவர் கூறுவது சிறுபிள்ளைத்தனமாகக்கூட பலருக்கு தோன்றக்கூடும் . ஏனெனில் , ஒருசமயம் உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்தாராம் ரித்தேஷ் , அப்போது அங்குள்ளவர்கள் டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டிருக்க தனக்கு கார்ட்டூன் பார்க்கவேண்டும் போலிருந்ததாம் எனினும் விருப்பத்திற்கேற்ப சேனலை மாற்ற ரிமோர்ட் என்னிடம் இல்லையே என கவலை கொண்டாராம். இதே பார்முலாவைத்தான் சுற்றுலா செல்லும்போது பயணிகளின் பஜற்றுக்கு ஏற்ற தேர்வு மற்றும் சேவை என்பதிலும் பயன்படுத்தினார் ரித்தேஷ்.

Oyo ஆரம்பித்ததும் எடுத்த எடுப்பிலேயே முதலாளி என்ற பந்தாகாட்டாது, களத்தில் இறங்கி வேலை பார்த்தார் ரித்தேஷ். அறையினை சுத்தம் செய்வது முதல் , வரவேற்பரையில் நிற்பது என எல்லாவற்றையுமே ஆரம்பத்தில் செய்தார் - ஒரு முறை ஒரு தம்பதியினர் தமது குழந்தையை இவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டனராம். இவரது நல்லநேரம் குழந்தை அழாமல் இவரிடம் சமத்தாக இருக்க திரும்பிவந்த பெற்றோர் இவர்தான் Oyo CEO என்பதை அறியாததால் 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்துவிட்டு சென்றனராம் . வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப் பழகியதால் அவர்களது விருப்பு வெறுப்புகளை நன்கு அறிந்து கொண்டு oyoவை மென்மேலும் வளர்ச்சியுரச் செய்யமுடிந்தது . இந்த ஆறு வருடங்களில் 2600கோடி ஆண்டு வருமானம் ஈட்டி வரும் ஒயோவின் founder இத்தனையையும் தன்னுடைய இருபத்துநான்கு வயதுக்குள் சாதித்தார். சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை சாதிக்கவேண்டும் என்கிற அந்த உத்வேகம் இருந்தால் மட்டும் போதும் என்பதைத்தான் ரித்தேஷின் கதை நமக்கு கூறு கின்றது. இன்று உலகின் பல நாடுகளிலும் Oyo செயற்படுகின்றது. 2020ல் Oyoவின் மொத்த சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்கா டாலர் . 2020பெப்ரவரி வரையில் உலகின் சுய தொழிலுக்கான பில்லியன் சொத்து மதிப்புள்ள இளம் தொழிலதிபர் என்கிற பெயரினை தக்க வைத்திருந்தார் ரித்தேஷ் . "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போல் படிப்பு என்பது பல்கலைக்கழகத்தோடு முடங்கிவிடும் ஓர் விடயம் அல்ல. பட்டம் பெறாமலேயே சாதிக்கலாம், வெற்றியை இலக்காக நிர்ணயிப்பவர்கள் அதற்காக முழுமனதோடு செயற்பட்டால்" எனக்கூறும் ரித்தேஷ் இன்றைய இளம் தலைமுறை தொழில் முனை வோர்க்கான ஓர் சாதனை நாயகன்தான் இல்லையா?

1 Comments

Previous Post Next Post