Netflix

Netflix
கோடிக்கணக்கான Subscribers, திரைக்கு வந்து கொஞ்ச நாளேயானா புதிய திரைப்படங்கள், பிரமாண்ட பொருட் செலவில் Netflix original series , இப்படி உலகம் முழுவதிலும் கலக்கிக்கொண்டிருக்கும் "Netflix'' பற்றியே இன்று நாம் பார்க்கப்போகின்றோம்.

1997ஆகஸ்ட் 29 , கலிபோர்னியாவில் வெறும் 2.5 டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் Netflix ! இன்று இவர்களுக்கென உலகம் முழுவதிலும் பதினைந்து கோடிக்கு மேற்பட்ட subscribers, கிட்டத்தட்ட 26 பில்லியன் டாலர் சொத்து மதிப்பென ஜொலிக்கும் Netflix உருவானதன் பின்னணிதான் என்ன? Reed Hastings என்பவர் "appalo 13" திரைப்பட வீடியோ கேசட் ஒன்றினை வாங்கிச்சென்று அதனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்க மறந்து விடுகின்றார். ஆறு வாரங்களுக்குப்பின் திரும்பவும் அந்த கடைக்கு சென்றபோது , கால தாமதத்திற்காக நாற்பது டாலர் தண்டப்பணம் அறவிடப்பட நொந்துபோனார் Reed. சில நாட்களுக்குப்பின் ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கையில் Reeds ஓர் விடயம் சிந்தனையில் பளிச்சிட்டது . அதுதான் ஜிம் கட்டண முறைமை. ஒருதடவை பணம் செலுத்தினால் போதும் மாதத்தில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜிம்மை பயன்படுத்திக் கொள்ளலாம் . இதே ஐடியாவை நாம் ஏன் கேசட் விற்பனையில் செய்து பார்க்கக் கூடாது ? யோசித்ததோடு நிறுத்திவிடாது, ஐடியாவை தன் நண்பரான Marc randolph என்பவரிடம் சொன்னபோது , ஏற்கனவே அமேசானில் புத்தகம் விற்கப்படும் முறையினைப்பார்த்து அதனால் கவரப்பட்டு தானும் இது போன்றதோர் ஏதேனும் பிசினஸ் செய்ய வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்த நண்பருக்கு Reedன் ஐடியா சூப்பராக தோன்ற, இருவரும் மளமளவென்று வேலையில் இறங்கினர் நிறுவனத்தை உருவாக்கி Netflix என பெயரும் சூட்டப்பட்டது . Netflix என்பதன் அர்த்த ம் internet + movie = Netflix! 30 ஊழியர்கள் , 925 Dvd களுடன் pay / rent அடிப்படையில் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டு , இன்று வேகமாக வளர்ந்துவரும் Subscription based streaming serviceஆக மாறியுள்ளது எனலாம். இன்று Computers , smartphone என படங்களை நேரடியாக பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்தி தருவதற்கான போட்டி சூடு பிடித்துள்ளதெனலாம் . இதில் உலக அளவில் முன்னணியில் இருப்பது Netflix என்றால் அது மிகையில்லை. திரையரங்கங்கள் , டிவி என்பவற்றுக்கு மாற்றாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பயன்படுத்தும் இவ்வசதியானது இன்று சுமார் 190 நாடுகளில் கிடைக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்வில் தவிர்க்கவியலாதவனாவாய் மாறியுள்ள டிவி சீரியல்களும் இதில் ஒளிபரப்பாகின்றன.

ஆரம்ப காலங்களில் வீடியோக்களை ஒன்லைன் மூலம் விநியோகிக்க இவர்கள் முயன்ற போதும் அப்போதைய இண்டெர்நெட் ஸ்பீட் (Internet speed) அதற்கான மிகப்பெரிய தடையாக இருந்தது உயர்தர வீடியோக்களை “KB”யில் இருந்த internet speedமூலம் வழங்கவியலாதுபோக, இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தபோது, கேசட்களை கொரியர்(Courier) மூலம் அனுப்பிவைக்கலாம். என முடிவு செய்யப்பட்டது (1999 காலப்பகுதி).

Netflix
ஆனால் வீடியோ டேப்களின் பாரம் அதிகம் என்பதால் , அதனை லொஜிஸ்டிக்ஸ் மூலம் அனுப்புவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது அட்வான்ஸ்சாக ஏதாவது யோசிக்கலாம் என கொண்டுவரப்பட்டதுதான் dvd! எனினும் அதிலும் சில சிக்கல்கள் தோன்றின. அப்போது தான் Dvd அறிமுக காலம் என்பதால் மக்களிடையே அது பற்றிய புரிதல்கள் அதிகம் இருக்கவில்லை என்பதோடு Dvd player போன்றவையும் விலைகூடியவகையாக இருந்தன. எனினும் எதிர் காலத்தில் இதில்தான் வெற்றி கிட்டும் என்பதால் Dvdயை வைத்தே Netflixஐ ஆரம்பித்தனர் .

மாதம் ஒருமுறை பணம் கட்டினால் போதும் , அந்த மாதம் முழுவதுமே எத்தனை Dvdகளை வேண்டுமானாலும் வாங்கி பார்த்துக்கொள்ளலாம். இதனால் மக்களுக்கு Due date மற்றும் shipping charges என்பவற்றிடம் இருந்து விடுதலை கிடைத்தது. அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே ஏகப்பட்ட பயனாளர்களை கொண்டிருந்தாலும் , ஏனோ நிறுவனம் சிலபல காரணங்கலால் நஷ்டத்திலேயே இயங்கியது . எனவே அப்போதைய மிகப்பெரிய போட்டி நிறுவனமான blockbusterரிடம் சென்று தங்களுக்கு Dvd சப்ளை பண்ண முடியுமா எனவும் , வேண்டுமானால் தங்களது நிறுவனத்தின் பெயரையும் blockbuster நிறுவனத்தோடு இணைத்துவிடுவதாக கோரினர் . ஆனால் கோரிக்கை மறுக்கப்பட்டு அவமானப்படுதப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர் . எனவே நஷ்டத்தை ஈடு செய்ய 5.5 மில்லியன் பங்குகளை shareஇல் விற்றுவிட்டனர். அத்தோடும் முடியவில்லை சிக்கல், 2004 இல் மார்க் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் என கூறி நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார் . எல்லா பொறுப்பும் Reedன் தலையில் சுமத்தப்பட்டது.

கொஞ்சநாள் பொறுத்திருந்தார் ரீட். ஏனெனில் அப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக இன்டர்நெட் வளரத்தொடங்கிக்கொண்டிருந்த காலகட்டமது. எல்லோரிடமும் Internet சென்று சேர்ந்த பின் மீண்டும் தன்னுடைய சேவையை தொடரத் தொடங்கியது Netflix . 2007 காலப்பகுதிக்குப்பின் இன்டர்நெட் வளர வளர Netflixஸும் சேர்ந்தே வளர்ந்தது எனலாம். 2019ல் 167 மில்லியன் subscribers உலகம் முழுவதிலும் .

ஆக , ஒரு நாற்பது டாலர் fineல் இருந்து இன்று ஒரு மில்லியன் Dollar பெறுமதியான நிறுவனமாக மாறியிருக்கிறது Netflix . நஷ்டத்தை ஈடு செய்ய blockbusterரிடம் விற்கப்பட்டிருந்தால், இன்று Netflix என்றதொரு வெற்றி நிறுவனம் நம் கண்முன்னே இருந்திருக்காது இல்லையா? எனவே, எப்போதுமே நாம் நம் திறமை மீதும் உழைப்பு மீதும் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. "It's just a bad day , not a bad life'

Post a Comment

Previous Post Next Post