The Most Popular Mobile App WhatsApp

The Most Popular Mobile App WhatsApp
1992ல் யுக்ரைனில் இருந்து ஒரு அகதி வேலை தேடி அமெரிக்காவிற்குள் வருகின்றார் . அவரும் அவரது தாயாரும் கையில் பணமின்றி , அரசால் கொடுக்கப்படும் உணவிற்காக தர்மஸ்தானமொன்றின் வாசலில் உணவுக்காக மணிக்கணக்கில் கால் வலிக்க காத்திருக்கின்றனர். தினமும் இதே நேரத்தில் இன்னொருவர் Dot.com bubble இல் தனது முதலீடுகள் அனைத்தையுமே இழந்துவிட்டு பிழைக்க வழிதேடிக்கொண்டிருந்தார். இந்த இருவரும் ஒன்று சேர்ந்து இன்றைய இணைய தொடர்பாடல் முறையையே தலைகீழாக புரட்டிப் போட்டனர். இதற்கு காரணம் அவர்கள் கண்டுபிடித்த மொபைல் ஆப் (mobile App). இன்றைய தேதிப்படி இந்த Applicationஐ பயன்படுத்தும் மாத பயனாளர்களின் எண்ணிக்கை 1.2 பில்லியன் மற்றும் 30 பில்லியன் செய்திப்பரிமாற்றம் தினமும்.

இந்த இரு நண்பர்களும் வேறு யாருமல்ல Jan Koum மற்றும் Brian Acton அவர்கள் தொடங்கிய நிறுவனம்தான் “the most popular mobile app in the world “WhatsApp". ஜான்னிற்கு தோல்வி ஒன்றும் புதிதல்ல இவர் தன் வாழ்க்கையில் பார்க்காத நிராகரிப்பேயில்லை. நிறைய நிறுவனங்கள் அவரை நிராகரித்தும் மனம் தளராது அவரது Appஇனை இந்த உலகிலேயே most valuable messaging Platform என்கிற நிலைமைக்கு கொண்டு சென்றார். இறுதியில் அவரை நிராகரித்த ஓர் மிகப்பெரிய நிறுவனமே அவரது appஐ விலைக்கு வாங்க வலிந்து சென்றது.Jan koum , Brian acton இருவரும் அவர்களது உழைப்பால் தமது நிறுவனத்தினை அந்த அளவிற்கு பெரிய அளவில் எடுத்துச்சென்றனர்.

உக்ரைனில் ஓர் சிற்றூரில் பிறந்த ஜான் சோவியத்தை சேர்ந்த ஒரு ''ஜூ" வாக இருந்ததால் ஏகப்பட்ட இன்னல்களை தன் வாழ்வில் எதிர்கொண்டவர். துன்பமும் துயரமும் அதிகரிக்க 1992 இல், ஜான் அவரது அம்மா மற்றும் பாட்டியுடன் கலிபோர்னியா வில் உள்ள mountain viewற்கு குடிபெயர்ந்து , அங்குள்ள சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் ஓர் சிறிய அபார்ட்மெண்ட்டில் வாழ ஆரம்பித்தார் . அப்போது அவருக்கு வயது வெறும் 16 மட்டுமே . அந்த வயதில் ஒரு குரோசரியில் (grocery shop) சுத்திகரிப்பாளராக வேலைக்குச் சேர, அவரது அம்மா குழந்தைகளை பராமரிக்கும் ஓர் வேலையில் இணைந்து கொள்கின்றார். அவர்களது வாழ்க்கை ஓர் நடுநிலைமைக்கு வந்து , எல்லாம் ஓரளவுக்கு அமைந்து வர , ஓர் மிகப்பெரிய பிரச்சினை ஜானின் முன்னேற்றத்தினை தடுத்து நிறுத்தியது. தன் தாயாருக்கு புற்று நோய் என்கிற செய்தி அவரை நிலைகுலையைச் செய்தது. ஆனாலும் அவர் தன் தன்னம்பிக்கையினை கைவிடவில்லை.

எல்லா பிரச்சினைகளையும் எதிர்த்துப் போராடி வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தார் . அடுத்த இரண்டு வருடங்களில் computer networking பற்றிய நிறைய விடயங்களை கற்றுக்கொண்டார். அப்போதுதான் தனக்கு program இல் நிறைய ஆர்வம் உண்டென்பதையே உணர்ந்து கொண்டார். “San Jose State University”யில் படிப்பை தொடர்ந்த இவர் பகுதி நேரமாக ஓர் நிறுவனத்தில் “security tester” வேலை பார்க்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்வரை வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்புதான் யாஹூவில் (Yahoo) வேலை கிடைத்தமை. அந்த நேரத்தில் yahoo ஓர் startup நிறுவனம்தான். 2000ஆண்டு ஜான்னின் தாயார் இறந்து விட, தனிமையானார் ஜான். அப்போது யாஹூ நிறுவனத்தில் இவரோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த பிரையன் அவருக்கு ஒரு நல்ல நண்பரானார். ஜானினது சின்னச் சின்ன திறமைகளைக்கூட ஊக்குவிப்பார் Brian, இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் யாஹூவில் ஒன்றாக வேலை பார்த்தனர். ஏராளமான விடயங்களை அங்கேதான் கற்றுக்கொண்டனர் எனலாம்.

The Most Popular Mobile App WhatsApp
2009ல் ஜான் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியபோது , புதிய புதிய ஆஃப்கள் நிறைய அறிமுகமாவதை அவதானித்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு அருமையான ஐடியா தோன்றியது. அதை செயல்படுத்த ஆரம்பிக்கும்போதே மூன்று முக்கியமான விதிமுறைகளை தனது கண்டுபிடிப்பில் உள்ளடக்கிக்கொண்டார். அதாவது எக்காரணம் கொண்டும் தான் புதிதாக கண்டுபிடிக்கும் சேவையில் விளம்பரங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டாவதாக, வாடிக்கையாளருக்கு தனது சேவை திருப்தியான அனுபவத்தினை கொடுக்க வேண்டும், மூன்றாவது வாடிக்கையாளர்களின் பிரைவசியை(Privacy) மதித்து நடக்க வேண்டும். ( இவரது தயாரிப்பு எந்தவொரு மெசேஜ்யையும் ஸ்டோர் செய்வதில்லை ) இந்த மூன்று கொள்கைகளுடன், 2009 February 24 தனது பிறந்தநாள் அன்று WhatsApp என்ற பெயரினை உத்தியோகபூர்வமாக பதிவு செய்தார்.

எல்லாமுமே நல்ல படியாக போய்க் கொண்டிருந்தபோது திடீரென WhatsApp crash ஆவதை கவனித்தனர். இந்த சிக்கல் நீண்ட நாட்கள் நீடித்ததனால், ஜானுக்கு பயங்கர டென்ஷன். ஒரு கட்டத்தில் இது வேலைக்காகாது என முடிவு செய்து appஐ கைவிட முன்வந்தார். அப்போது பிரையன், அந்த எண்ணத்தினை விட்டு விடும்படி கூறி, இன்னும் கொஞ்சகாலம் பொறுக்கலாம் என motivate செய்தார்.பிரைன் சொன்னது போலவே கொஞ்ச நாள் கழித்து "ஆப்பிள்'' மூலம் அவர்களுக்கும் ஓர் வாய்ப்பு அமைந்தது . Apple phone push notifications launch, Whatsappகான நல்ல வாய்ப்பானது. அடுத்து நிதி போதாமை ஏற்பட , பிரையன் தனது யாஹூ நண்பர்கள் மூலமாக 250 அமெரிக்க டாலர் நிதி திரட்டிக்கொடுக்க . பிரையனுக்கு WhatsApp co founder status கிடைத்தது.

2013 முற்பகுதியிலிருந்து மிக வேகமாக வளரத்தொடங்கியது WhatsApp. எந்தவித புரமோஷனும் பப்லிசிடியும் இல்லாமல் இயல்பாகவே மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற ஆரம்பித்தது . அந்த நேரத்தில் இவர்களது அலுவலகத்தில் வெறும் ஐம்பத்தைந்து ஊழியர்கள் மாத்திரமே பணிபுரிந்தனர் . ஆனால், தினமும் அவர்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு தமது சேவையினை வழங்கவேண்டியிருந்தது.

The Most Popular Mobile App WhatsApp
2014 Februaryயில் 19.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு , ஆரம்பத்தில் 
Jan koum மை நிராகரித்த Facebook நிறுவனம், WhatsApp நிறுவனத்தினை விலைக்கு வாங்கிக்கொண்டது. அதுமட்டுமன்றி ஜானுக்கு “FB board of directors'" member பதவியும் கொடுக்கப்பட்டது. இந்த உடன்படிக்கைகளையெல்லாம் ஜான் எங்கே வைத்து கையொப்பம் இட்டார் தெரியுமா? ஆம் , அவரும் அவரது தாயாரும் உணவுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருந்த பில்டிங்கில் வைத்தே அவரது பில்லியன்கள் பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. உண்மையில் WhatsApp நிறுவனத்தின் வெற்றியானது, startup நிறுவனங்களை தொடங்கவிருக்கும் பலருக்கும் பாடமாக அமையக்கூடியது. வெறும் முதலீடுகளும் மார்க்கெட்டிங்கும் மட்டுமே ஒரு தயாரிப்பினை வெற்றியடைய செய்துவிடாது. ஒரு தயாரிப்பு வழங்குகின்ற சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி போன்றவையே முடிவு செய்யும் அதன் வெற்றியையும் தோல்வியையும். தொடர்பில் இருக்கவேண்டும் என எல்லோரும் நினைக்கும்போது தெய்வ வரமாக வந்தது WhatsApp என்றால் அது மிகையில்லை. WhatsApp மென்மேலும் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோமாக ...

Post a Comment

Previous Post Next Post