மூழ்காத என்று உத்தரவாதம் பெற்ற டைட்டானிக் கப்பல் முதல் பயணத்திலேயே மூழ்கியது(The Titanic, which was guaranteed not to sink, sank on its first voyage)

விமானப் பயணங்கள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருந்தொகை பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிரபலமாக இருந்தன. ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் அந்தக் காலத்தில் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் அதியுயர் மேம்பாடு அடைந்திருந்தன.
வைற் ஸ்ரார் லைன் (White Star Line) என்ற ஜக்கிய இராச்சியத்தின் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் கப்பல் நிறுவனம் டைட்டானிக் கப்பலுக்கு உரிமையாளராக இருந்தது. எதுவிதத்திலும் மூழ்காது என்ற உத்தரவாதத்துடன் இந்தக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குத் தொடங்கியது. நான்கு புகை போக்கிகளைக் கொண்ட இந்தப் பிரமாண்டமான கப்பலில், கப்பல் விபத்திற்கு உட்பட்டால் பயன்படுத்தும்  'உயிர்காக்கும் படகுகள்' (Lifeboats) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு செல்லப்பட்டன... 

கப்பல் நிறுவனத்தின் உத்தரவாதத்தை மீறிய டைட்டானிக் (Titanic) என்ற பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தில் அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப்பாறையுடன் (Iceberg) மோதி 1912 ஏப்ரல் 14ஆம் நாள் இரு பாகங்களாக உடைந்து மூழ்கியது.

இந்த விபத்தில் 1,517 பேர் உயிரிழந்தனர். உயிர் காக்கும் படகுகள் கூடிய எண்ணிக்கையில் இருந்திருந்தால் இதில் 1,500 உயிர்களாவது காப்பாற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கப்பலில் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் தொடக்கம் ஐரோப்பாவின் புதிய வாழ்க்கையைத் தேடும் கிராமப்புற மக்களும் பயணித்தனர்.

பெருமளவு உயிரிழப்பிற்கு காரணம் உயிர் காக்கும் படகுகளின் தட்டுபாடு மாத்திரமல்ல டைட்டானிக்கப்பலின் வானொலி இயங்காமல் இருந்ததும் காரணமாக இருக்கிறது வானொலி நல்ல நிலையில் இருந்திருப்பின் பிற கப்பல்களை உதவிக்கு அழைத்திருக்க முடியும்.

அந்த இரவில் மிதக்கும் பனிப் பாறைகள் பற்றிய எச்சரிக்கையை அத்திலாந்திக் கடலில் சென்ற பிற கப்பல்கள் டைட் டானிக் கப்பலுக்கு அனுப்பின. ஆனால் வானொலி முடங்கிக் கிடந்ததால் எசசரிக்கைகள் வீணாகின.

பிரமாண்டமான டைட்டானிக் கப்பலில் இன்னொரு தொழில்நுட்பக் கோளாறு இருந்தது. கப்பலைத் திசை திருப்ப உதவும் சுக்கானுக்கும் (Rudder) சுக்கானைத் திருப்பும் பிடிக்கும் (Tiller) இடையிலான தொடர்பில் 37 நொடி (37 Seconds) நேர வித்தியாசம் இருந்தது. இதனால் இறுதி நேரத்தில் பனிப்பாறை யுடன் மோதுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. டைட்டானிக் விபத்திலிருந்து படிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இருக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தால் இயற்கையை மோதி வெல்ல முடியாது, எங்கோ ஓரிடத்தில் மனிதத் தவறு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

இரு துண்டுகளாக உடைந்த கப்பல் இரண்டு மணித்தியாலங்களுக்கும் சற்றுக் கூடிய நேரத்தில் அத்திலாந்திக் கடலின் 12,600 அடி ஆழத்திற்குச் சென்று விட் டது. இன்றும் அது அங்கேயே கிடக்கிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது 'முதலாவதாகப் பெண்களும் சிறுவர்களும்' (Women and Children) என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. உயிர் காக்கும் படகுகளில் இவர்கள் தான் முதலில் ஏற்றப் பட்டனர். ஆனால் மலிவுப் பயணம் செய்த பல பெண்களும் சிறுவர்களும் காப்பாற்றப் படவில்லை . சில ஆண்கள் பெண்களையும் சிறுவர் களையும் முந்திக் கொண்டு படகுகளில் ஏறித் தப்பிச் சென்றனர். சில உயர் குடிப்பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களைப் பிரிய மறுத்து அவர்களோடு கடலில் மூழ்கினர். பலவிதமான மனித இயல்புகள் அந்த நள்ளிரவில் வெளிப்பட்டன.

டைட்டானிக் மூழ்கி ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்டது. அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப்பாறை ஆபத்தைப் போக்கும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Post a Comment

Previous Post Next Post