Tamil Facts:Episode 5

  • குழந்தை பிறக்கும் போது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவரானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கொன்கிரீட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.
  • தினத்தோறும் 450 கலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
  • பெண்களுக்கு சராசரியாக 4.5 லீற்றர் இரத்தம் இருக்கும்.
  • ஆண்களுக்கு சராசரியாக 5.6 லீற்றர் இரத்தம் இருக்கும்.
  • நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொரு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
  • நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தறியும் சக்தியுண்டு.
  • நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
  • முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
  • மனித இதயம் சராசரியாக ஒரு வருடத்துக்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
  • ஒரு மனிதனின் சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்தக் குழாயில் செலுத்துகிறது.
  • இதயத்திலுள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடி வரை பீய்சசி அடிக்கும் சக்தி கொண்டது.
  • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
  • நாம் சுவாசிக்கும் மொத்த ஒட்சிசனில் 20% மூளைக்குச் செல்கிறது. நமது மூளை 80% நீரால் ஆனது.
  • மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
  • எமது உடலிலுள்ள கல்லீரலானது 500 விதமான வேலைகளைச் செய்கிறது.

Post a Comment

Previous Post Next Post