பெண்டுலம் கடிகாரத்தின் புதிர்(The puzzle of the pendulum clock)

முக்கால பெண்டுலம் கடிகாரத்தை நினைவிருக்கிறதா? அதிநவீன டிஜிட்டல் கடிகாரங்கள் எல்லாம் வந்துவிட்ட பின், இந்த வகை பழைய கடிகாரங்கள் வழக்கொழிந்து போய் விட்டன. இந்நிலையில் விஞ்ஞானிகள் பெண்டுலம் கடிகாரம் தொடர்பான, 350 ஆண்டுகால புதிருக்கு இப்போது விடை கண்டுபிடித்துள்ளனர். டச்சு விஞ்ஞானியும், கணித மேதையுமான கிறிஸ்டியன் ஹுஜென்ஸ் தான் முதன்முதலில் இந்த புதிரை கண்டுபிடித்தவர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்தபோது, ஒரு நாள் ஹுஜென்ஸ் தன் வீட்டில், ஒரே தளத்தில் மாட்டப்பட்டிருந்த இரண்டு பெண்டுலம் கடிகாரங்களை கவனித்துக் கொண் டிருந்தார். அந்த இரண்டு கடிகாரங் களின் பெண்டுல அசைவும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு வியந்தார். எப்படி இரண்டு கடிகாரங்களின் பெண்டுலமும் ஒன்று போலவே அசைகின்றன என்று புரியாமல் திகைத்துப் போனார். உடனே அவர், தன் உடல் நலக் குறைவையும் மறந்து ஆய்வில் ஈடுபட்டார். ஆனால் இதற்கான விடையை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை . இது நடந்தது, 1665ஆம் ஆண்டில். இத்தனை
ஆண்டுகளாக இந்தப் புதிருக்கு தெளிவான பதில் கிடைக்காத நிலையில் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த இரண்டு பௌதிகவியல் ஆய்வாளர்கள் இதற்கு விடை கண்டுள்ளனர். பெண்டுலம் அசையும் போது கடிகாரத்தில் உண்டாகும் மெல்லிய விசை, அதே பரப்பில் இருக்கும் மற்றொரு கடிகாரத்துக்கு சென்று தாக்கத்தை செலுத்துவதாகவும்,இதன் காரணமாக இரண்டாவது பெண்டுலம் மீது பாதிப்பை உண்டாக்குவதாகவும், இதனால் பல மணி நேரத்துக்குப் பின், இரு பெண்டுலங்களும் ஒரே மாதிரியான அசைவைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post