ஆபிரகாம் லிங்கனின் கனவு(Nightmare of Abraham Lincoln)

கனவுகள் நம் வாழ்வில் இடம் பிடிக்க தவறியதே இல்லை . சிறுவயது முதல் முதிர்வயது வரை அனைவருக்கும் கனவுகள் வரும். கனவிலும் நல்ல கனவு, கெட்ட கனவு என்று உண்டு. கனவு காணுங்கள் என்றார் மறைந்த தலைவர் அப்துல் கலாம். கனவைப் பற்றி நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? கனவு காண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? கனவுகள் பலிக்குமா? 
ஏப்ரல் 1865ஆம் ஆண்டு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் எழுதிய ஒரு சம்பவத்தை பார்ப்போம். பத்து நாட்களுக்கு முன் மிகவும் முக்கியமான வேலைகளின் காரணமாக, நான் மிகவும் தாமதமாக படுக்கைக்குச் சென்றேன். மிகுந்த களைப்பின் காரணமாக உடனே தூங்கி விட்டேன். அன்று எனக்கு ஒரு கனவு வந்தது.

அங்கே மரண அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன், பலர் அழுது கொண்டிருந்தனர். நான் என் படுக்கையிலிருந்து எழுந்து படிகளில் கீழே இறங்கி வந்தேன் என நினைக்கிறேன். அங்கே அதே அழுகையால் அமைதி கலைந்தது. ஆனால் அழுபவர்களைக் காணமுடியவில்லை . நான் ஒவ்வோர் அறையாக சென்றேன்; எங்கும் யாருமே தென்படவில்லை. எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எல்லா பொருட்களும் எனக்கு பழக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் துக்கம் மேலிட அழுத நபர்கள் எங்கே? எனக்கு குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? நான் பார்த்த சூழ்நிலைகள் மிகவும் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தன.

எனக்கு அப்படித்தான் இருந்தது கிழக்குப் பக்கமாகச் சென்று அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கே நான் ஓர் ஆச்சரியத்தை கண்டேன். எனக்கு முன்னால் ஒரு சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வண்டி இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடை அணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது. அதைச் சுற்றி படைவீரர்கள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தனர். அந்த பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. நான் ஒரு படைவீரனிடம் கேட்டேன் "யார் வெள்ளை மாளிகையில் இறந்து விட்டார்?” படைவீரன் பதில் சொன்னான் "ஜனாதிபதி”; "அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்”. பிறகு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை ஏற்பட்டது. நான் விழித்துக் கொண்டேன். நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை . அது வெறும் கனவுதான் என்றபோதிலும், எனக்கு இதுவரை அதுதான் விநோதமாக தொல்லை தந்தது.

ஏப்ரல் 14 ஆப்ரகாம் லிங்கன் ஒருவனால் சுடப்பட்டார். அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப்பக்க அறையில் வைக்கப்பட்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post