போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஆபத்தான பக்க விளைவுகள்(Dangerous Side Effects of Not Drinking Enough Water)

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல் வறட்சியடைந்து பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் என்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று தெரியுமா? தற்போது பலரும் அதிகப்படியான வேலையால் சாப்பிட மற்றும் தண்ணீர் குடிப்பதையே மறந்துவிடுகின்றனர். இதனால் அவர்களின் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாமல் உள்ளது.

பொதுவாக உடலுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தண்ணீர் இல்லாவிட்டால், உறுப்புகளின் இயக்கம் குறைந்து, அதன் மூலம் பல அபாயங்களை சந்திக்க வேண்டி வரும். எனவே நீரின்றி உடல் வறட்சியடைந்தால் என்ன பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கொலஸ்ட்ரோல் அளவு அதிகமாகும் உங்களுக்கு ஒன்று தெரியுமா? உடலில் நீரின் அளவு குறைந்தால் கொலஸ்ட்ரோலின் அளவு அதிகரிக்கும் என்று. மேலும் ஆய்வுகளிலும் இது சொல்லப்பட்டுள்ளது. எனவே உடலில் கொலஸ்ட்ரோல் அளவு அதிகரிக்கக் கூடாதெனில், தண்ணீரை மறக்காமல் குடித்து வாருங்கள்.

ஆஸ்துமா போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சுவாசிக்கும் மூச்சுக்குழாய் வறட்சியடைந்து இறுக்கமடையும். இதனால் மூச்சுக்குழாய் சுருங்கி மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். சில நேரங்களில் உடல் வறட்சியால் அலர்ஜியை கூட சந்திக்க வேண்டி வரும்.

சோர்வு எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமானால், உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இருக்க வேண்டும். இந்த நீர்ச்சத்து வேண்டுமானால், தினமும் தவறாமல் தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், எப்போதும் சோர்வுடனேயே இருக்க வேண்டியது தான்.

மலச்சிக்கல் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், செரிமான பிரச்சினைகளான மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மலச்சிக்கல் பிரச்சினையை நீங்கள் சந்திப்பவராயின் தண்ணீரை அதிகம் குடித்து வாருங்கள்.

உடல் பருமனாகும் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைந்தால், கொலஸ்ட்ரோல் அளவு அதிகரிக்கும். அதன் அளவு அதிகமானால், உடல் பருமன் அதிகமாகும்.

உயர் இரத்த அழுத்தம் நமது உடலில் உள்ள இரத்தமானது 92% தண்ணீரைக் கொண்டது. ஒருவேளை உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால், இரத்தமானது அடர்த்தியாகி, அதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சினைக்கு உள்ளாகக்கூடும். உயர் இரத்த அழுத்தம் அதிகமானால், இது இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே இவற்றையெல்லாம் தடுக்க தினமும் 3லீட்டர் தண்ணீரை தவறாமல் குடித்து வாருங்கள்.

Post a Comment

Previous Post Next Post