இன்றைய கணினி வாழ் மக்கள் பலரும் தங்களிடம் இல்லை என்று தவிக்கும் இரண்டு விஷயங்கள் நிம்மதியும், உறக்கமும் தான். உறக்கம் இல்லாததே பெருமளவு இவர்களது நிம்மதி சீர்கெட காரணமாகி விடுகிறது. எனவே, இவர்களது முக்கிய தவிப்பும், பிரச்சினையும் உறக்கமாகத் தான் இருக்கிறது. உறக்கம் இல்லை என்றால் உடனே மருத்துவர்களின் கை, கால்களில் விழுந்தாவது தூக்க மாத்திரை வாங்கிக் கொள்கிறார்கள். தூக்க மாத்திரைகள் கொஞ்சம், கொஞ்சமாக உங்களை மந்தமாக்கி விடும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. சில எளிய விஷயங்களை நீங்கள் பின்பற்றி வந்தாலே ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.
ஒரே நேரத்தில் உறங்குவது
தினமும் ஒரே நேரத்துக்கு உறங்கச் செல்வதை பழக்கப்படுத்துங்கள். இது, உங்கள் உறக்கத்தின் சுழற்சியைச் சீராக்கி இயற்கையாகவே நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவும்.
பாலும் பழமும்
நீங்கள் உறங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலும், ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள். இவற்றின் மூலம் உறக்கத்துக்கான ஹோர்மோன் மெலடோனின் சிறப்பாக செயற்படுகிறது. மேலும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் நல்ல உறக்கத்தை தரவல்லது.
இரவு உணவு
இரவு உணவு நேரத்தில் செரிமானத்துக்குக் குறைவான நேரம் எடுத்துக்
கொள்ளும் வகையில் அமைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். கனமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதே போல, உறங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்னரே இரவு உணவை முடித்துவிட வேண்டும்.
குட்டித் தூக்கம்
பகல் நேரத்தில் குட்டி உறக்கம் போடுவதை நிறுத்துங்கள். இதனால் பெரும்பாலும் இரவு நேர உறக்கம் தடைப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
குளியல்
வெதுவெதுப்பான நீரில் குளித் துவிட்டு உறங்கச் செல்வது இயற்கையான முறையில் நல்ல உறக்கத்தைத் தரும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. தசைகள் இலகுவாக உணர உதவுகிறது.
கோப்பி வேண்டாம்
சிலர் இரவு உணவு முடித்த பிறகும் கூட கோப்பி குடிப்பார்கள். இது உறக்கத்தைக் கெடுக்கும் பழக்கமாகும். உறங்கச் செல்வதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பே கோப்பி குடிப்பதை தவிர்த்துவிட வேண்டும்.
மூலிகைத் தேநீர்
கோப்பி போன்றவற்றை தவிர்த்து விட்டு மூலிகை தேநீர் குடிக்க ஆரம்பியுங்கள். இது உறக்கத்தை ஊக்குவிக்கும் தன்மை உடையதாகும்.
குளிர்மையான அறை
நீங்கள் உறங்கும் அறை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்மையானதாகவும் இருக்கும் சூழலுக்குக் கொண்டு வாருங்கள். இவை உடலில் வெப்பத்தை அதிகரிக்கவிடாமல் நல்ல உறக்கத்தை இயற்கையான முறையில் தரவல்லதாகும்.
மின்னணு உபகரணங்கள்
முடிந்த வரை தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, மடிக்கணினி போன்ற மின்னணு உபகரணங்களை உறங்கும் அறையில் வைத்திருக்காதீர்கள். இவை அனைத்தும் உங்கள் உறக்கத்தைக் கெடுப்பவை ஆகும்.
Tags:
Tamil WriteUps
Merkur Gold Strike Safety Razor - FEBCASINO
ReplyDeleteMerkur's https://febcasino.com/review/merit-casino/ Gold Strike Safety Razor, wooricasinos.info Merkur https://deccasino.com/review/merit-casino/ Platinum Edge Plated Finish, German, Gold-Plated, Satin Chrome Finish. Merkur has a more หาเงินออนไลน์ aggressive aprcasino looking,