What happened in Nauru island?

நம்ம நித்யானந்தா ஓட கைலாச நாட்டை பத்தி கொஞ்ச நாளைக்கு பரபரப்பா பேசிகிட்டு இருந்தோம். அது உண்மையா பொய்யா எண்டு யாருக்கும் தெரியாது. அதைவிட சூப்பரா ஒரு நாடு எல்லாத்தையுமே இலவசமாக கொடுத்தால் எப்படி இருக்கும். இலவசனா வெறும் எஜுகேஷன்(Education), ஹாஸ்பிடல்(Hospital), டிரான்ஸ்போர்ட்(Transport) மட்டும் இலவசம் கிடையாது. நீங்க எத்தனை பேர் இந்த வாலி(WALL-E) அப்படிங்கற படத்தை பார்த்து இருக்கீங்கன்னு தெரியாது. இந்த வாலி(WALL-E) படத்துல வர்ற மாதிரி ஒரு வாழ்க்கை கிடைச்சா எப்படி இருக்கும்.

What happened in Nauru island?

ஆஸ்திரேலியா பக்கத்துல ஒரு குட்டி தீவு தான் இந்த நாடு. நவ்ரு ஐலாண்ட்(Nauru island) அப்படிங்கற ஒரு தீவுதான் இந்த நாடு. வெறும் 30 நிமிஷத்துல இந்த நாட்ட சுத்தி வந்துடலாம் எண்டா பாத்துக்கோங்க. இந்த நாட்டுடைய மக்கள் தொகை அப்படிங்கறது வெறும் பத்தாயிரம் பேர் மட்டும்தான். இந்த நாடு எடுத்தவுடனே எல்லாம் ரொம்ப பணக்கார நாடா எல்லாம் இல்ல. எல்லாத்தீவுகளை மாதிரியும் எல்லா நாடுகள மாதிரியும் நார்மலா(Normal) தான் இருந்துக்கிட்டு இருந்தது.

அந்த நாட்டினுடைய மிகப்பெரிய தொழில் ஆதாரம் அப்படிங்கறது மீன் பிடிக்கிறதும் விவசாயமும் அப்படிங்கிறதும் மட்டும் தான். இது ரெண்டும்தான் இந்த நாட்டினுடைய வருவாயா இருந்துகிட்டு இருந்தது. திடீர்னு அந்த நாட்டுக்கு ஒரு புதையல் கிடைத்தது. அந்த புதையல கொடுத்தது இந்த பறவைகள் தான். ஒவ்வொரு சீசனிலும் கண்டம் விட்டு கண்டம் போய்கிட்டு இருக்குற இந்த பறவைகள் என்ன பண்ணுதுன்னா இந்த தீவில் வந்து கொஞ்சம் இழப்பாறிட்டு போகுது. அந்த மாதிரி கணக்கிலேயே அடங்காம கூட்டம் கூட்டமா வர்ற பறவைகள் அந்த நாடு முழுக்க எச்சம் போட்டுட்டு போகுது. இந்த எச்சம் எல்லாம் என்ன ஆச்சு அப்படின்னா கொஞ்ச காலத்தில உரமா மாற ஆரம்பிச்சது. இந்த பறவைகளுடைய எச்சத்தில பாஸ்பேட் அப்படிங்கிற ஒரு கன்டென்ட்(Content) ரொம்பவே நிறைய இருக்கு. இந்த விஷயம் உலகத்தில் இருக்கிற மிகப்பெரிய உரம் தயாரிக்கிற கம்பெனிகளோட கண்ணுல பட்டுச்சு. எல்லா கம்பெனிகளும் போட்டி போட்டுட்டு அந்த நவ்ரு(Nauru) நாட்டுக்கு படையெடுக்க ஆரம்பிச்சது இந்த பாஸ்பேட் நிறைஞ்சிருக்கற உரத்தை வாங்குறதுக்காக. 1968 இலையே ஒரு குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிற அளவு அந்த நாட்டுக்கிட்ட பணம் இருந்தது. அந்த நாடும் பணம் கிடைக்குது அப்படின்னு சொல்லிட்டு அங்க இருக்கிற எல்லா உரங்களையும் எடுத்து விக்க ஆரம்பிச்சாங்க. போட்டி போட்டுக்கிட்டு எல்லாரும் அதிக விலை கொடுத்து இந்த உரங்களை வாங்க ஆரம்பிச்சாங்க.

அந்த நாட்டுக்கு கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்(Jackpot) அடிச்சது. அது எந்த அளவுக்கு பெருசு என்றால் அந்த நாட்டில் இருக்கிற யாருமே வேலைக்கு போக தேவையில்லை. அவங்களுக்கு தேவையான டிவி(TV), பிரிட்ஜ்(Fridge), வாஷிங் மெஷின்(Washing Machine), கேட்ஜெட்ஸ்(Gadgets),சாப்பாடு எல்லாமே ஃப்ரீ. டிரான்ஸ்போர்ட்(Transport) ஃப்ரீ அப்படிங்கிற போது இந்த கார்,பஸ் மட்டும் கிடையாது பிளைட்டே(Flight) உங்களுக்கு ஃப்ரீ தான் காபி குடிக்கிறதுக்கு லண்டன் போனாலும் அவங்க ஃப்ரீயா பிளைட்ல போய் காபி குடிச்சுட்டு ரிட்டன் வரலாம். அந்த அளவுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அங்க இருக்கிற மக்களுக்கு எல்லாத்தையுமே இலவசமாக வாரி வழங்கிட்டு இருந்தாங்க. ஒரு 10-15 வருஷம் இதே மாதிரி நல்லா போய்கிட்டு இருந்தது.

What happened in Nauru island?

அங்க இருக்கிறவங்க எல்லாரும் அவங்க செய்யுற தொழிலையே சுத்தமா மறந்துட்டாங்க. அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும் அப்படின்னு சொல்லி பழைய லைஃப்(Life) அவங்க மறந்துட்டாங்க. வேலைக்கு போறதுனா என்னன்னே தெரியாது அவங்களுக்கு. ஒரு காலகட்டத்தில அவங்க சாப்பிடுற சாப்பாட்டையே அவங்க வீட்ல சமைக்கிறத நிறுத்திட்டாங்க. எல்லாமே இந்த டின்னில அடைக்கப்பட்ட உணவை இம்போர்ட்(Import) பண்ணி தான் சாப்பிட ஆரம்பிச்சாங்க. எந்த வேலையுமே செய்யாம அவங்க இஷ்டப்பட்ட எல்லாத்தையும் சாப்பிட்டதால உலகத்திலேயே உடல் பருமன் அதிகமா இருக்கிற நாட்டிலும் அந்த நாடு முதல் இடத்தை பிடிச்சது.

அந்த நாட்டில் இருக்கிற மக்கள்ல ஆண்கள் 97% சதவீதமும், பெண்கள் 93%சதவீதமும் உடல் பருமனா இருந்தாங்க. அங்க சராசரி வெயிட்டு(Weight) 100 கிலோ(Kilogram) அப்படிங்கிறது தான். அந்த நாட்டுல இந்த மாதிரி பருமனா இருக்கிறதே ஒரு பேஷன்(Fashion) ஆயிடுச்சு. குண்டா இருந்தாதான் அழகு அப்படிங்கிற மாதிரி கலாச்சாரமே மாறிடுச்சு. இந்த சொர்க்கம்னு சொல்றத பூமியிலே அனுபவிச்சிட்டு இருந்தாங்க சந்தோஷமா. மேலே போற பால்(Ball) என்னக்கா இருந்தாலும் கீழ வந்து ஆகணும் இல்ல. அதே மாதிரி ஒரு விஷயம் அந்த நாட்டுக்கு நடந்தது. அவங்களுடைய அந்த பாஸ்பேட் வளங்கள் எல்லாமே குறைய ஆரம்பிச்சது. இந்த பணத்தை அள்ளி அள்ளி கொட்டி கொடுத்த அந்த கம்பெனிகள் தங்களுடைய மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கிட்டு அந்த நாட்டை விட்டு வெளியேற ஆரம்பிச்சாங்க. ஆல்ரெடி(Already) அங்க இருந்த வளத்தை எல்லாத்தையுமே அவங்க கூறு போட்டு வித்துட்டாங்க. இப்ப அவங்களுக்கு மீன் பிடிக்கறதும் மறந்து போச்சு. விவசாயம் பண்றதும் மறந்து போச்சு. விவசாயம் பண்றதுக்கு ஒரு நல்ல நிலமும் அங்க கிடையாது. ஏன்னா அங்க இருந்தா எல்லா பாஸ்பேட்டையும் எடுத்து அவங்க வித்துட்டாங்க. இந்த திடீர் பணக்கார நாடு ஏழ்மையை நோக்கி கீழே விழ ஆரம்பிச்சது. இந்த பாஸ்பேட்டை வாங்குற எல்லா கம்பெனிஸும் பணம் கொடுக்குறத திடீர்னு நிறுத்தின உடனே அவங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. இருந்த பணத்தை வைத்து கொஞ்ச நாள் ஓட்டுனாங்க.

அதுக்கப்புறம் பசியும் பஞ்சமும் அந்த நாட்டில் தாண்டவம் ஆட ஆரம்பிச்சது. குற்றங்களே நடக்காத நாடுகள் பட்டியல்ல முதலிடத்தில் இருந்த நாட்ல இந்த பசியும் பஞ்சத்தினால் ஏகப்பட்ட குற்றங்கள் அதிகரிக்க ஆரம்பிச்சது. இந்த மெச்சூரிட்டியே(Maturity) இல்லாம இந்த சின்ன நாட்டால அதிகப்படியான பணத்தையும் ஹேண்டில்(Handle) பண்ண முடியல. அதிகப்படியான இந்த பஞ்சத்தையும் சமாளிக்க முடியல. கொஞ்ச நாளிலேயே இந்த நாடு மணி லாண்டரி(Money laundering) உண்டான ஒரு பேங்கா(Bank) மாறுச்சு. அங்க ஒரு பேங்க்(Bank) ஓபன்(Open) பண்ணி இந்த கருப்பு பணத்தை எல்லாத்தையும் வெள்ளை பணமா மாத்தி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதுவும் கொஞ்ச காலத்துக்கு தான். உலகத்துல இருக்குற எல்லா நாடுகளும் அந்த நாடு மேல தடை விதிக்க ஆரம்பிச்சாங்க. கடைசியா ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டாலே பெரிய விஷயம் அப்படிங்கற ஒரு நிலைமைக்கு வந்தாங்க. பக்கத்துல இருக்குற ஆஸ்திரேலியாவோட நாட்டு கிட்ட போயிட்டு கையேந்தி நின்னாங்க. இப்ப வரைக்கும் ஆஸ்திரேலியா(Australia) வருஷம் வருஷம் அதுக்கு குடுக்குற பண்ட(Fund) வச்சு தான் அந்த நாடு பொழப்பு ஒட்டிக்கிட்டு இருக்காங்க.

What happened in Nauru island?

ஆஸ்திரேலியா இந்த நாட்டை இப்போ தத்து எடுத்து இருக்கு. சும்மா ஒன்னும் எடுக்கல. ஆஸ்திரேலியாவுக்கு வர்ர அகதிகள் எல்லாரையும் அந்த நாட்டில் தான் முகாம்கள் போட்டு தங்க வச்சு அவங்கள பராமரிச்சுக்கிட்டு இருக்காங்க. இப்பவும் அந்த நாட்டில் மூன்று வேலை சாப்பாடு அப்டிங்கறது கனவா தான் இருந்துகிட்டு இருக்கு. இந்த பணத்தை சில பேர் சொல்லுவாங்க வெறும் பேப்பர் தானே அதுக்கேன் இவ்ளோ மதிப்பு குடுக்குறீங்க அப்படின்னு சொல்லிட்டு இதுவரை பேப்பர் மட்டும் கிடையாது. கண்ணுல பாக்குறதுக்கு வேணா பேப்பர் மாதிரி இருக்குமே தவிர இந்த பணம் அப்படிங்கறத நம்மளோட உழைப்பையும் நம்மளோட அறிவையும் சேவ்(Save) பண்ணி வைக்கிற ஒரு மீடியம்(Medium) தான். அத பல விஷயத்துக்கு கன்வெர்ட்(Convert) பண்ற ஒரு மீடியம்(Medium) தான் இந்த மணி(Money) அப்படிங்கறது. உங்களோட அறிவும் உங்களுடைய உழைப்பும் இல்லாம இந்த பணம் உங்ககிட்ட வந்துச்சுன்னா அதுக்கு நீங்க தகுதி இல்லை அப்படிங்கிறது தான் அர்த்தம். அதை உங்களால ஹாண்டில்(Handle) பண்ண முடியாது. அது எப்படியும் உங்களை விட்டு போயிரும். இந்த வெறும் காகிதம் அப்படின்னு சொல்றோம் இல்லையா? இன்னைக்காவது கண்ல பாக்குறதுக்கு காகிதமா இருக்கு. வருங்காலத்தில டிஜிட்டல் கரன்சிதான்(Digital Currency). பணம் எங்க இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. நம்முடைய மொபைலில்ல பேலன்ஸா(Balance) மட்டும்தான் பாத்துகிட்டு இருக்க போறோம். ஆனா அதுக்கு உண்டான மதிப்பு அப்படியே தான் இருக்க போது.

நீங்க பணத்தை நிறைய சம்பாதிக்கணும்னு நினைக்கிறீங்களா? இந்த மாதிரி உலகத்திலேயே பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் அந்த பணத்தை சம்பாதிக்கிறதுக்கு சொல்ற ஒரே வழி அப்படிங்கிறது ஆல்வேஸ் மணி இஸ் எ பாய் ப்ராடக்ட்(Always Money is a Buy Product) இந்த பணம் அப்படிங்கறது ஒரு உபரியா தான் உங்களுக்கு வரணும் அப்படி வர்றத யாராலும் தடுக்க முடியாது. அதாவது உங்களுடைய உழைப்போட உங்களோட திறமையோட ஒரு உபரியா தான் இந்த பணம் அப்படிங்கறத உங்களுக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கிற பணம்தான் உங்களுக்கு எல்லாத்தையுமே கொடுக்கும் இந்த ஒரு விஷயத்தை தான் உலகத்துல இருக்குற நம்பர் ஒன் பணக்காரர்கள் எல்லாருமே ஃபாலோ(Follow) பண்ணி இருக்காங்க. உங்களுடைய கனவுகள் மேல உங்களோட உழைப்பையும் திறமையும் போட்டீங்கன்னா அது உங்களுக்கு எல்லாத்தையுமே கொடுக்கும் பணத்தையும் சேர்த்து தான்.

1 Comments

Previous Post Next Post