Coupang Empire: The Rise and Reign of Bom Suk Kim

நெடுநாள் நீடிக்காது என்பதை புரிந்து கொண்டு தங்களுக்கென்று ஓர் புதுமையான சேவையை உருவாக்கி அதன் மூலம் பெரும் வெற்றியை பெற்றுக் கொள்கின்றன. உதாரணத்திற்கு வாய்ப்புத் தேடும் ஓர் புதுமுக நடிகர் ஏற்கனவே பிரபலமான ஓர் பெரிய நடிகரை பிரதியெடுத்து தனது முதல் படத்தில் நடித்து வெற்றி அடைகிறார் என்றால் . அடுத்தடுத்த படங்களில் அவர் அதே பாணியை பிரதி செய்ய முயன்றால் விரைவில் காணாமல் போய் விடுவார் தனக்கென்று ஓர் பாணியை உருவாக்கிக் கொண்டு, தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே இண்டஸ்ட்ரியில் நிலைத்து நிற்பார். புதிய நிறுவனங்களுக்கும் இதே கதை தான். சரியான யோசனை கிடைக்காமலோ, கட்டாயத்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலோ அவர்கள் இன்னொரு வெற்றி பெற்ற நிறுவனத்தை ''குளோன்'' செய்யவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளிவருகிறார்கள், தங்களுக்கான அடையாளத்தை கண்டறிந்து வெற்றியடைகிறார்கள். இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தான் இன்றைய Startup Storyயில் நாம் பார்க்கப் போகும் "Coupang"! இந்நிறுவனத்தின் பெயரைக் கூட நம்மில் அநேகர் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.

Coupang Empire: The Rise and Reign of Bom Suk Kim

தென்கொரியாவில் இயங்கிவரும் மின் வணிக நிறுவனம் இது. அமேசானுக்கெல்லாம் தண்ணிகாட்டுமளவிற்கு பிரமாதமாக சேவை வழங்கி அசத்துகிறார்களாம் . அதற்காக Coupangஐ அமேசானின் குளோன் என நினைத்து விட வேண்டாம். அப்படிப் பார்த்தால் உலகிலுள்ள அனைத்து மின்வணிக நிறுவனங்களையும் அமேசானின் குளோன்களாக அறிவிக்க வேண்டியிருக்கும். ஆனால் தொடங்கப்பட்ட புதிதில் ''Coupang" ஒரு குளோனாகதான் இருந்தது . அமேசானின் குளோனாக அல்லாமல் , 'Groupon'' என்கிற இன்னொரு இணைய சேவையின் குளோனாக ! "போம்சியோக் கிம்'' என்பவரால் உருவாக்கப்பட்ட நிறுவனமே Coupang.

இவர் பிறந்தது தென்கொரியாவில் தான் - ஆனால் ஏழு வயதிலேயே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டார் . அமெரிக்காவில் கிம் நன்றாக படித்தார். அவரொரு வழக்கறிஞராக வர வேண்டும் என அவரது பெற்றோர் விரும்பினாலும், ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த கிம், பத்திரிகை ஒன்றினை ஆரம்பித்து , பின் இணையச் சேவையொன்றினை இயக்கத் தொடங்கினார். நியூரிப்பபிளிக் என்கிற ஊடக நிறுவனத்தில் பயிற்சி பெற்ற கிம், "தி கரண்ட்" என்கிற பெயரில் மானவர் இதழொன்றினை தொடங்கி நடத்தினார். பின்னர் அதனை ஒரு பெரிய பாடக நிறுவனத்திற்கு விற்றுவிட்டு, "02138" என்ற பெயரில் இன்னொரு பத்திரிகையை தொடங்கினார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லை , அதை இழுத்து மூடிவிட்டு அடுத்தது என்ன ? என யோசித்தபோது தான் தென்கொரியாவில் ஓர் மின் வணிக சேவை நிறுவனத்தை தொடங்குகிற யோசனை வந்தது. தொடங்கும் தொழிலை பணம் கொழிக்கும் அமெரிக்காவிலேயே தொடங்கலாமே ? ஏன் தென்கொரியா ? முதல் காரணம் தென்கொரியா ஏற்கனவே கிம்முக்கு பழக்கமான நாடு ( என்னதான் அமெரிக்கா செட்டில் என்றாலும் ,அடிக்கடி தென்கொரியா வந்து போய்க் கொண்டுதான் இருந்தார் கிம்) அவர் பிறந்த நாடு, சொந்த ஊரில் தொழில் தொடங்கி வெற்றியடைய வேண்டும் என எல்லோர்க்கும் ஆசையிருக்கும் இல்லையா? இரண்டாவது காரணம், அந்நாட்டின் மக்கள் தொகை குறைவு. அட, அப்படியானால் அங்கே இணையக் கடை ஆரம்பித்து என்ன லாபம் என யாரும் யோசிக்கக்கூடாது.

Coupang Empire: The Rise and Reign of Bom Suk Kim

மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அந்த மக்கள் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள். இணையம், மொபைல் போன்றவை தென்கொரியாவில் அதிவேக வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தன. ஆனால், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் இன்னுமே தென்கொரியாவுக்குள் வந்திருக்கவில்லை. கிம் இதையெல்லாம் கூட்டிக்கழித்து யோசித்தார். இந்த சிறிய நாட்டில் தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கிற நாட்டில் பொருட்களை விரைவாக கொண்டு சேர்ப்பது எளிதாக இருக்கும் அதன் மூலம் மக்களை அசத்தி விட்டால், அதன் பிறகு நம்மிடமே எல்லாவறையும் வாங்குவார்கள். இந்த எண்ணத்துடன் 2010ல் கிம் தன்னுடைய புதிய நிறுவனத்தை தொடங்கினார். அதில் முதலீடு செய்தவர்கள் அமெரிக்கர்கள் தான், ஆனால் நிறுவனம் தென்கொரியாவில் செயல்பட்டது , உணவகங்கள். மசாஜ் பார்லர்கள் தொடங்கி, பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை சலுகை விலையில் பெற்றுத் தருவதற்கான கூப்பன்கள் இந்த இணையதளத்தில் கிடைத்தன. அப்போது சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய "Groupon" என்கிற சலுகை தளத்தின் குளோன் தான் இது. புது நிறுவனத்தை தொடங்குவதற்காக தென்கொரியா வந்த கிம், அதற்கான அலுவலகத்தை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு புரோக்கர் கிம்மை ஏற இறங்கப்பார்த்து "நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,பார்த்தால் படித்தவர் போல் இருக்கிறீர்கள் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, பேசாமல் நல்ல வேலையாக பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்றாராம். ஏனெனில், தென்கொரிய மக்கள் அப்படித்தானாம் , எங்கேயுமே வேலை கிடைக்காதவர்கள் தான் சொந்த தொழில் தொடங்குவார்கள். கிம் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர் என்பதால் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன்னுடைய நிறுவனத்தை எப்படி வளர்க்கலாம் என்பது பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தார். Coupangகான ஊழியர்களை தேடத் தொடங்கினார். ஆனால், இங்கேயும் தென்கொரியாவின் கலாசாரம் அவரை முறைத்தது புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை . எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏமாற்றம் எப்படியோ ஓர் இணையதள வடிவமைப்பாளரை தேடிப்பிடித்த கிம், "உங்கள் ஓய்வு நேரத்தில் எங்கள் இணையத்தளத்தினை வடிவமைத்துக் கொடுங்கள்'' என கேட்டு சம்மதிக்க வைத்தார். அதன் பிறகு இணையத்தில் வேலை தேடுவோரையெல்லாம் வடி கட்டத் தொடங்கினார். அதிலிருந்து சில கெட்டிக்காரர்களை பிடித்துக் கொண்டார். ஒரு வழியாக Coupang இணையதளம் இயங்கத் தொடங்கியது சலுகைகளை பட்டியலிட்டுவிட்டு யாரேனும் வருவார்களா என காத்திருந்தார் கிம்.

அதன் பிறகுதான் நிஜமான தேர்வு தொடங்கியது. அது வரையில் தனக்கு சரியென்று தோன்றியதை இணையதளத்தில் வெளியிட்ட கிம், இப்போது தன் வாடிக்கையாளர்களை கவனிக்க தொடங்கினார். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ? எதை தன் தளத்தில் வாங்க விரும்புகிறார்கள் அதில் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன ? அவற்றை எப்படி சரி செய்யலாம் என யோசித்தார். இதன் அடிப்படையில் அவரது தளத்தில் இடம் பெறும் விஷயங்களும் , அது சார்ந்த சேவைகளும் மாற்றியமைக்கப்பட்டன.

Coupang Empire: The Rise and Reign of Bom Suk Kim

குறிப்பாக இந்த இணையதளத்தில் பொருட்களை வாங்குவதே ஒரு நல்ல அனுபவமாக இருக்க வேண்டும் , யார் எதை வாங்கினாலும் அதை மிக விரைவாக அவர்களுக்கு கொண்டு சேர்த்து விட வேண்டும் என்றெல்லாம் கிம் யோசித்தார். மற்றவர்கள் சில நாட்களில் கொடுத்த பொருட்களை இவர் ஓரிரு நாள்களில் கொண்டு சேர்த்தார். வந்து சேர்ந்த பொருளில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக மாற்றித் தந்தார். வாடிக்கையாளர்களை எல்லா விதத்திலும் மகிழ்ச்சிப் படுத்தினார் இன்று அவர் இன்னொரு நிறுவனத்தின் குளோனாக இயங்கவில்லை. கொஞ்ச கொஞ்சமாக அதிலிருந்து வெளியேறி Coupangஐ ஓர் தனித்துவமான நிறுவனமாக கட்டமைத்து விட்டார் கிம். அவருடைய முயற்சிகளுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் தோள் கொடுத்தார்கள். அவர்களுடைய ஆதரவுடன் Coupangன் சந்தை மதிப்பு அதிவேகமாக உயர்ந்தது. சுருக்கமாக சொன்னால் ஒரு குளோன் , இன்று கதாநாயகனாகி விட்டான்.

Post a Comment

Previous Post Next Post