History Of Flipkart

பெங்களூரில் இரண்டு சதுரடியில் ஓர் பிளாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம், இன்று எட்டு லட்சம் சதுரடியில் ஓர் மிகப்பெரிய அலுவலகத்தினையே கொண்டுள்ளது. வெறும் இரண்டே பேரால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனத்தில் இன்றோ ஆறாயிரத்து எண்ணூறு பேருக்குமேல் பணிபுரிகின்றனர் . இரண்டு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு இருபதாயிரம் கோடிக்குமேல் எந்த நிறுவனம் அது? யாரால் ஆரம்பிக்கப்பட்டது ? இதற்கு பின்னால் இருக்கப்போகும் கதை என்ன ? 

History Of Flipkart
சச்சின் பன்சல், பின்னி பன்சல் இருவர்க்குமிடையேயான பெயர் பொருத்தத்தினை கண்டு இருவரும் உறவினர்கள் என்றெல்லாம் நாம் நினைத்து விடக்கூடாது. ஏனெனில் 2004 இல் டெல்லி IITயில் படித்த நல்ல நண்பர்களே அவர்கள் இருவரும் படித்து முடித்ததும் பின்னி பன்சலுக்கு அமேசானில் வேலை கிடைக்க, அவர் அமெரிக்கா சென்று விடுகின்றார். அதன்பின் சில மாதங்கள் கழித்து சச்சின் பென்சலுக்கும் அதே அமேசானில், நண்பர் பின்னி பன்சலின் டீம்யிலேயே வேலை கிடைக்க சச்சினும் அமெரிக்கா சென்று விடுகின்றார் . சுமார் பத்து மாதங்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கின்றனர் . அமெரிக்காவில் வேலை, டொலர்களில் சம்பளம், சொகுசான வாழ்க்கை என எல்லாமும் சரியாக சென்று கொண்டிருந்தபோதுதான், திடீரென இருவருக்கும் அந்த பொறி தட்டுகின்றது , நாம் ஏன் அமேசானில் இன்னொருவருக்குக் கீழ் வேலை பார்க்க வேண்டும் ? பேசாமல் இருவரும் இந்தியா திரும்பிச் சென்று நாமே ஓர் ஒன்லைன் ஸ்டோர் ஆரம்பிக்கலாமே ? என யோசிக்கின்றனர் இரண்டு வருடத்திற்கு குடும்பத்திற்கு தேவையான பணம் கையில் இருக்கின்றது. உடனே ஊருக்கு கிளம்பிப் போய் பிஸ்னஸினை ஆரம்பித்து விடலாம் என முடிவெடுத்து இந்தியா திரும்புகின்றனர்.

இந்தியா வந்தவர்கள் பிஸ்னஸ் ஆரம்பிக்க சரியான இடம் பெங்களூர்தான் என எண்ணி முதன் முதலில் "price compaire site" ஒன்றினை (ஒவ்வொரு பொருளும் எந்தெந்த இடத்தில் என்னென்ன விலையில் விற்கப்படுகின்றன என்பதை தெரிவிக்கும் ஓர் வெப்சைட் ) ஆரம்பிக்கும் நோக்குடன் அங்கே செல்கின்றனர். ஆனால் திடீரென வெப்சைட் ஆரம்பிக்கும் எண்ணத்தினை விட்டு விட்டு ஒன்லைன்னில் புத்தகங்களை விற்க முடிவெடுகின்றனர். ஏனெனில் அமேசானும் முதன்முதலில் தமது ஒன்லைன்னில் புத்தகங்களையே விற்றது. அதேமாதிரி இந்தியாவிலும் செய்ய எண்ணிய போது சுற்றியிருந்தவர்களெல்லாம் இந்தியாவில் இந்த திட்டம் சரிவராது, ஏனெனில் இந்தியர்கள் கடைக்குப்போய் பொருளை கண்ணால் பார்த்து, கைகளால் தொட்டு பேரம் பேசி வாங்கும் மனோநிலை உடையவர்கள் அவர்களெல்லாம் ஒன்லைன்னில் பொருட்களை வாங்க துணியாமாட்டார்கள், ஊருக்கு நான்கு புத்தகக்கடை இருக்கும்போது யார் ஒன்லைன் இல் புத்தகம் வாங்குவார்கள் ? என எதிர்மறை கருத்துக்களை கூறியும் பன்சல் நண்பர்கள் அவை எவற்றையும் செவியில் வாங்கிக் கொள்ளாது. தம் திட்டத்தினை செயற்படுத்த தொடங்கினர்.

புத்தக கடைகளுக்கு சென்று புத்தகங்களை வாங்கிவந்து, தமது இரண்டு சதுரடி அளவிலேயான பிளாட்டில் வைத்துக்கொண்டு வெப்சைட்டினை ஆரம்பித்தனர் . கையில் இருந்த இரண்டு லட்சம் பணத்தில் பிளாட் வாடகை , புத்தக கொள்வனவு என செலவுகள் இருந்ததால் வெப்சைட்டினை விளம்பரப்படுத்த கையில் காசில்லை இருவரிடமும் தங்கள் பெற்றோரிடம் சென்று ஒன்றரை வருடத்திற்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் உணவு , போக்குவரத்து முதலிய அத்தியாவசிய தேவைகளுக்காக தரும்படியும், அதற்குள் தாம் பிசினஸில் கால் ஊன்றிக்கொள்வோம் என உறுதியளிக்கின்றனர்.

ஒவ்வொருநாளும் மாலைப்பொழுதில் ஷாப்பிங் மால்ஸ், தியேட்டர்ஸ் , பெரிய அங்காடிகள் , காப்பி ஷொப்ஸ் என மக்கள் நடமாட்டம் அதிகமாயுள்ள இடங்களுக்குச் சென்று “நீங்கள்'' Flipkart'" மூலம் புத்தகங்களை ஆர்டர் செய்யுங்கள் , பத்துவீத விலைக்கழிவுடன், பிரீ(FREE) டெலிவரியாக அவை உங்கள் வீடு வந்து சேரும்" என்கிற புக் மார்க்கினை கையளிப்பதன்மூலம் தங்கள் வெப்சைட்டினை விளம்பரப்படுத்தினர் - சில தினங்களிலேயே சந்திரா என்பவரிடமிருந்து ஒரு கணினி சம்பந்தமான புத்தகம் ஆர்டர் செய்யப்படுகின்றது.

History Of Flipkart
Flipkartஇன் முதல் ஆர்டர் பன்சல் நண்பர்கள் மிகுந்த சந்தோசத்துடன் குறித்த புத்தகத்தினை தேடினால் எங்கே தேடியும் கிடைக்கவில்லை . பெங்களூர் முழுவதும் அலைந்தும் கிடைக்காததால் இரண்டு நாட்களின்பின் பின்னி பன்சல் தமது முதல் கஸ்டமருக்கு ஒரு மெயில் அனுப்புகின்றார் . அதில், இன்னும் மூன்றே நாட்களுக்குள் குறிப்பிட்ட அந்த புத்தகத்தினை அனுப்பிவைப்பதாயும் , மீறினால் உங்கள் பணத்தை திருப்பி அனுப்பி வைத்துவிடுகின்றோம்" என குறிப்பிடுகின்றார் .

அடுத்தநாள் பெங்களூரில் உள்ள "சப்னா'' என்கிற ஓர் புத்தகசாலையில் குறிப்பிட்ட புத்தகத்தை தேடிப்பிடிக்கின்றார் சச்சின் பன்சல். அந்தோ பரிதாபம் , அவசரத்தில் பர்ஸை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை அப்போதுதான் அவதானிக்கின்றார். வேறுவழியின்றி, கொட்டுகின்ற மழையில் அருகில் உள்ள நண்பர் ஒருவரிடம் சென்று , நிலமையைக்கூறி 500 ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு வந்து , அந்த புத்தகத்தை வாங்கி கஸ்டமருக்கு அனுப்பி வைக்கின்றனர் . 2007 அக்டோபர் ஆரம்பித்த இந்த பயணம் ஒரு வருடத்திலேயே பிரமாதமான வரவேற்பினை பெற்றது . உடனே அடுத்த கட்டத்துக்கு நகர ஆரம்பித்தனர் பன்சல் நண்பர்கள். புத்தகங்களுடன் சேர்ந்து எலக்ட்ரானிக் பொருட்களான mobile phones, chargers, pendrive போன்றவற்றையும் விற்க எண்ணினர். ஆனால் அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. உறவினர்களிடமிருந்து கொஞ்சம் பணம் கிடைக்கின்றது. நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கின்றது.2007இல் சிரியதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் 2011இல் நானூறு ஐநூறு பேர் வேலை பார்க்கும் நிறுவனமாக வளர்ந்திருந்தது .

இந்தியர்களிடம் முதலில் பணத்தை கொடுத்துவிட்டு பொருட்களை கொள்வனவு செய்யும் நம்பிக்கையெல்லாம் ஆரம்பத்தில் கிடையாது "நீ பொருளைக்கொடு நான் பணத்தை தருகின்றேன் " என்கிற டீல் உடையவர்கள் அவர்கள். "Cash on delivery'' என்கிற சிஸ்டதினை முதலில் இந்தியர்களிடம் அறிமுகப்படுத்தியவர்கள் Flipkart என்றால் மிகையில்லை 2014இல் தீபாவளியன்று முதன் முதலில் "the big billion day" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தினர் . அதாவது ஒரு செல்போன் ஒரு ரூபாய், ஒரு கம்ப்யூட்டர் நான்கு ரூபாய் என ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினை விளம்பரப்படுத்தினர் . விடுவார்களா மக்கள்? விடிய விடிய உற்கார்ந்திருந்து Flipkartஇல் ஆர்டர் செய்யத்தொடங்கினர் . அதிர்ஷ்டம் நூறுபேருக்கு கைகொடுத்ததென்றால் , ஆயிரம்பேரை கைவிட்டது போலும் . கிடைத்தவர்கள் சந்தோஷிக்க , கிடைக்காதவர்கள் Flipkartஐ திட்டித்தீர்த்தனர்.

History Of Flipkart
இதுவே மென்மேலும் Flipkart எல்லோரிடமும் சென்றுசேர ஒரு நல்ல வாய்வழி விளம்பரமாகவும் அமைந்ததெனலாம். அப்போதுதான் அநேகர் இந்த ஒன்லைன் பற்றி தேடிப்பார்க்க ஆரம்பித்தனர் . சீனாவில் உள்ள "Tencent'' என்கிற முதலீட்டு நிறுவனமும் ஜப்பானின் softbankநிறுவனமும் பத்து மில்லியன் டாலர்களை முதலீடு செய்தன. அதன் பின் அசுர வளர்ச்சி கண்ட Flipkartடில் 2018ஆம் ஆண்டு walmart கிட்டத்தட்ட 16 கோடி முதலீட்டினை செய்தது. இரண்டு இந்தியர்கள் ஆரம்பித்து வைத்த இந்த நிறுவனம் இன்று முக்கால்வாசி அமெரிக்க நிறுவனமாக மாறிவிட்டதெனலாம் Walmart ( 81.3%) , tiger management (4.7%) , microsoft (1.3%) , Accel (1.1%) என்ற அடிப்படையில் பங்குகள் இன்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . 2018ஆம் ஆண்டு சச்சின் பன்சல் தன்னுடைய பங்குகளாக கிட்டத்தட்ட 6500 கோடிகளை எடுத்துக்கொண்டு Flipkartஇல் இருந்து வெளியேறிவிட்டார்.

"Times magazine" வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த நூறு மனிதர்களுள் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் இருவரும் இடம்பெற்றிருப்பதும் இங்கே குறிப்பிடக்கூடியது . மேலும் ஏகப்பட்ட சிறு தொழிலாளர்களும் தங்களுடைய உற்பத்திகளை Flipkartமூலம் விற்பனை செய்வதன் மூலம் அவர்களும் லட்சங்களில் சம்பாதிக்க வழியமைத்துக்கொடுத்துள்ளது எனலாம்.

அமெரிக்க வாழ்க்கை கிடைத்தாலே போதும் என்று ஓடிவிடும் எண்ணம் கொண்ட பலருக்கும் இந்த பன்சல் நண்பர்களது வெற்றிக்கதை ஓர் பாடமாக அமையக்கூடும். ஏனெனில் அவர்கள் தங்களுக்கு கிடைத்த அமெரிக்காவில் வேலை என்கிற comfatzoneஐ விட்டு வெளியேறி சொந்தமாக தொழில் செய்து பில்லியன்களை குவித்தவர்கள் .. அந்த மனோதைரியத்திற்கே நாம் அவர்களை ஓர் முன் மாதிரியாகக் கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post