The occult of double existence(இரட்டை இருப்பு எனும் அமானுஷ்யம்)

The occult of double existence(இரட்டை இருப்பு எனும் அமானுஷ்யம்)
அல்ஃபோன்ஸோ (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு ஆவார். 22/9/1774ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த 'பஸ்ஸில் தெல் கொதி' (Bustle Del Gothi) இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக்கொண்டிருந்தார்.சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களைப் பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்து போப் சற்று முன்னர் இறந்து விட்டார் என அறிவித்தார். அனைவருக்கும் ஆச்சரியம், பலர் நம்பவும் இல்லை . போப் இருப்பது ரோம் நகரில், மறு நாள், ரோமில் இருந்து உத்தியோகபூர்வமாக போப் இறந்த தகவல் அந்த நகருக்கு வந்தது. அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி இங்கிருந்தபடியே அல்ஃபோன்ஸோவால் அந்தத் தகவலை கூற முடிந்தது? உள் உணர்வாக இருக்கும் என பலர் நினைத்தனர். 

தகல்களின்படி போப் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கு வந்த அல்ஃபோன்ஸோ அவரின் அருகில் இருந்து ஜெபம் (செபம்) செய்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்தன! இது எப்படி ஒரே நபர் ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட இடங்களில் இருக்க முடியும்? இதுவே (இரட்டை இருப்பு) எனப்படும் மர்மம்!

அடுத்த சம்பவம் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற் றது. அமெரிக்காவில் விஸ்கான்சின் (Wisconsin) பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம். தாய், தந்தை , சித்தி மற்றும் இரு பிள்ளைகளைக் கொண்டது.
ஒரு நாள், மூத்த மகள் தனது தோழியின் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தாள். தாய் தனது வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தூங்குவதற்காக கட்டிலுக்குச் சென்றாள். அங்கு அவர் கணவர் ஏற்கனவே தூக்கத்தில் இருந்தார். பல நிமிடங்கள் ஆகியும் தாயாருக்கு தூக்கம் வரவில்லை . எதேச்சையாக வெளியே வந்து பார்த்தார். வெளியே, மின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. வீட்டு வாசல் கதவை அவரது மகள் பூட்டிக்கொண்டிருந்தாள். நேரம் கடந்துவிட்டது போய் தூங்கு... என சொல்லிவிட்டு தாயார் அடுப்படிக்குச் சென்றார். ஆனால், கதவைப் பூட்டிய தனது மகளின் முகத்தில் ஒரு வித்தியாசம் இருந்ததை உணர்ந்தார். அதனால், மகளின் அறைக்குச் சென்றார். அங்கு மகள் இல்லை ! மீண்டும் மகள் வெளியே சுற்றச் சென்றுவிட்டாள் என ஆத்திரம் அடைந்த அவர், தனது மகளின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்றுக் கொண்ட அவரது மகள், தான் இன்னமும் தோழியின் வீட்டில் இருப்பதாகக் கூறினாள். தாயாரால் நம்ப முடியவில்லை . அவளது தோழியின் தாயாரிடம் கைத்தொலைபேசியைக் கொடுக்கும்படி கூறினார். அவரது தாயாரும் அந்தப்பெண் மாலையில் இருந்து அங்கேயே இருப்பதை உறு திப்படுத்தினார். இவரால் நம்ப முடியவில்லை . அவர்களது வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினார். அவரது மகளே அந்த தொலைபேசி அழைப்பையும் எடுத்தாள். தனது மகள் வெளியில் இருப்பதை நினைத்துக் கொண்டிருந்த அந்தத் தாயாருக்கு அந்த நினைவலைகள் உருவமாக பரிணமித்தனவா என்று கூட தெரியவில்லை . அடுத்த சம்பவம். விடுமுறை நாள் ஒன்றில், அந்தக் குடும்பத்தின் இரண்டாவது மகள் குளிரான காலைப்பொழுதில் வீட்டிற்கு வெளியே குளிர் அங்கி (sweater) அணியாது சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த சித்தி, மேல் மாடியில் இருந்தபடியே அவளது தாயாருக்கு தகவல் கொடுத்தார். தாயாரும் அதைப் பார்த்தார். என்றாலும் தனது மகளுக்கு அவ்வாறான தட்ப வெப்ப நிலையில் செல்வது பிடிக்கும் என்பதால் அவர் அந்தத் தகவலை பெரிதாகக் கருதாமல், தொலைக் காட்சி பார்ப்பதற்காக இருக்கையில் அமர்ந்தார். அமர்ந்து அடுத்த கணம், மேல் மாடியில் இருந்து, அப்போது தான் படுக்கையில் இருந்து எழுந்த உடையுடன் அவரது மகள் வந்தாள்.

முதல் சம்பவத்தின் உறுதிக்கு பெரிதாக சான்றுகள் இல்லை . ஆனால் இரண்டாவது சம்பவத்திற்கு, அருகில் இருந்த வீட்டாரும் சாட்சி! எப்படி இவை சாத்தியம்? இவை இயற்கையாவையா? நம்மாலும் முடியுமா?

Post a Comment

Previous Post Next Post