Precaution Activities for Diabetes(நீரிழிவு நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்)

பரம்பரையில் வருவதாயினும், நம் செயற்பாட்டால் வருவதாயினும் நீரிழிவு நோயை கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றினால் வராமல் தடுக்கலாம்.

  1. சீனிக்குப் பதிலாக நாட்டு வெல்லம் அல்லது பனங்கற்கண்டு பயன் படுத்துதல். சோற்றைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிகம் உண்ணுதல்.
  2.  இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி அளவு தினம் சாப்பிடுதல்.
  3.  பாகற்காய் வாரம் மூன்று நாட்கள் எடுத்தல். 
  4. நாவல் பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிடுதல்.
  5.  முள்ளங்கி தவிர மற்ற கிழங்குகளைத் தவிர்த்தல். 
  6. வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுதல்.
  7.  நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தல்.
  8.  கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல். 
  9. பொதியிடப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல். சுவைக்காக உண்ணாது நலத்துக்காக உண்ணுதல்.

இளமை முதல் இவற்றைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் வராது. இந்நோய், சீனி சாப்பிடுவதால் வருவதல்ல, கணையம் பாதிக்கப்படுவதால் வருவது.
நீரிழிவு நோயாளிகள்தான் இனிப்பைத் தவிர்க்க வேண்டும். நோய் இல்லாதவர்கள் அளவோடு இனிப்பு உண்ணலாம். நீரிழிவு நோய் வந்த பின் மேற்கூறியவற்றைப் பின்பற்றுவதோடு, 
  1. நாவல் விதைப்பொடி, சிறுகுறிஞ்சா இலைப்பொடி இவற்றை மருத்துவர் கூறும் அளவிற்கு எடுத்துக் கொள்ளுதல். 
  2. சுறுசுறுப்பான நடைப்பயிற்சி. 
  3. மென்மையான செருப்பு அணிதல். 
  4. எல்லா உறுப்புகளையும் சோதித்தல்.
  5.  மருத்துவர் வழங்கும் மருந்துகளைத் தவறாது எடுத்தல்.
  6.  மனதை மகிழ்ச்சியாக வைத்திருத்தல். 
இவற்றைச் செய்தால் நீரிழிவு நோய் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அலட்சியப்படுத்தினால் தான் ஆபத்தில் முடியும். முன்னெச்சரிக்கையோடு வாழ்ந்தால் இந்நோயால் பாதிப்பு வரவே வராது.

Post a Comment

Previous Post Next Post