Unknown Facts of Japan(ஜப்பானின் அறியப்படாத உண்மைகள்)

ஜப்பானில் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் சுத்தம். அலுவலகம், வீடு, தெரு, பூங்கா என சுத்தத்தின் பூர்வீகமாகவே அவர்கள் இருக்கின்றார்கள். அங்கு துப்புரவுத் தொழிலாளிக்கு எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் உண்டு. அவர்கள் ஊழியர்கள் இல்லை . ஹெல்த் இன்ஜினியர்கள். அவர்களுக்கு ஜப்பானில் எவ்வளவு சம்பளம் தெரியுமா? 5000 முதல் 8000 டாலர்கள் வரை!

தொழில் நுட்பத்தில் ஐப்பானியர்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருந்தாலும் ஜப்பானியர் இன்னொரு ஜப்பானியரை சந்தித்தால் தங்களது மொழியில் தான் பேசிக்கொள்கிறார்கள். இயற்கை வளம் இல்லாமல் வருடா வருடம் நூற்றுக்கணக்கான இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்ட பின்பும் ஜப்பான் மீண்டும் எழுந்ததற்கு அவர்களது அயரா உழைப்பே காரணம். உலகில் தற்போது ஜப்பான் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு.

நமது மூளைச்செயல்பாடுகளைப் புரிந்து கொண்டு செயலாற்றுகின்ற ரோபோக்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறார்கள். குறிப்பாக மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்கின்ற மாதிரியான ரோபோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் ரோபோக்களின் தேவைகளும் அங்கு அதிகரித்து வருகின்றன. உலக மயமாக்கலின் எந்த ஓர் அம்சமும் தங்களின் தாய் மொழியைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்கின்றார்கள். அங்கு படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களுடைய தாய் மொழிகள் முதற் பாடம். பாடசாலைகளில் தினமும் 15 நிமிடங்கள் மாணவரும் ஆசிரியரும் இணைந்து பாடசாலையை துப்புரவாகச் சுத்தம் செய்கின்றனர். இதனால் வளர்ந்த ஒரு ஜப்பானியரிடம் எந்த ஒரு வேலையையும் இழிவாக நினைக்காத பாங்கும் சுத்தமாக இருப்பிடத்தை வைத்திருக்கும் பழக்கமும் காணப்படுகின்றன.

முதலாம் வகுப்பு தொடக்கம் ஆறாம் வகுப்பு வரை நேர்மை பற்றிய போதனை பாடத்திட்டம் மாணவருக்கு அளிக்கப்படுகிறது. முதல் மூன்று வகுப்புகளில் ஜப்பான் குழந்தைகளுக்கு பாடப்புத்தகக் கல்வியோ பரீட்சைகளோ கிடையாது. அடிப்படை அறிவும் ஆளுமை உருவாக்கமுமே அப்போது முன்னிலைப்படுத்தப்படுகின்றன. எவ்வளவு வசதி இருந்தாலும் ஜப்பானிய வீடுகளில் வேலைக்காரர்களைக் காண முடியாது. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் முழுக்கவனம் செலுத்துகின்றனர். வீதிப்போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை விட தனி மனித ஒழுக்கம் அங்கு மேலோங்கி நிற்கின்றது. வீதியில் நடு இரவில் யாரும் இல்லாத சூழலில் கூட சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்தால் கார்கள் நிச்சயம் நின்று கொண்டிருக்கும். நாயை வெளியே கூட்டிச்செல்லும் எஜமானர்கள் கூடவே ஒரு பையையும் எடுத்துச் செல்வர்.

நாய் அசிங்கம் செய்தால் அதை உடனே சுத்தம் செய்து விடுவர். ரயில்களிலும் உணவகங்களிலும் ஜப்பானில் மொபைல் போன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சுய சேவை முறையிலான உணவகங்களில் மக்கள் தங்கள் தேவைக்கேற்ப உணவுகளை எடுத்து உண்பதைக் காணலாம். உணவை யாரும் வீணடிப்பதில்லை. அங்கு முடிந்தளவில் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்துக் கொள்கின்றனர். குப்பைகளில் இருந்து ஆடைகளைத் தயாரிக்கின்றனர். என்னதான் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அவர்கள் மறக்காத மூன்று விஷயங்கள் ஒன்று தாய் மொழி, இரண்டு நாம் ஜப்பானியர் என்ற ஒருமைப்பாடு, மூன்றாவது சுய ஒழுக்கம்.

Post a Comment

Previous Post Next Post