Amazing Fact About the Camel(ஒட்டகம் பற்றிய வியப்பூட்டும் தகவல்)

பாலைவனத்தில் நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் நீண்ட நாட்களுக்கு எப்படி வாழ முடிகிறது என்பதில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.

பரிணாம வளர்ச்சியின் போக்கில், ஒட்டகங்கள் முதுகுப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு திமில்களைப் பெற்றன. இந்தத் திமில்கள் கொழுப்பை சேமித்து வைக்க உதவுகின்றன. (பலர் நினைப்பது போல தண்ணீரை அல்ல) உணவும் நீரும் கிடைக்காத போது, இந்தக் கொழுப்பு சக்தியாக மாறி ஒட்டகத்துக்கு தெம்பு கிடைக்கிறது. சஹாரா பாலைவனத்தில் சில ஒட்டகங்கள் 6 மாதங்கள் கூட ஒரு சொட்டு நீர் அருந்தாமல் உயிரோடு இருப்பதுண்டு. பல ஒட்டகங்கள் பாலைவனத்தில் வளரும் தாவரங்களை அசை போட்டு, அதில் இருக்கும் தண்ணீரை வைத்து சமாளிக்கின்றன.

ஒட்டகங்கள் வெயிலில் நிற்கும்போது சூரியனைப் பார்த்து நிற்கும் வழக்கம் உடையவை. அப்போதுதான் தன் உடலின் நிழல் தன் மீதே விழுந்து வியர்வை சிந்துவதை குறைத்துக்கொள்ள முடியும். மந்தையாக நிற்கையில், ஒட்டகங்கள் தங்களுக்குள் ஒத்தாசையாக ஒன்றின் நிழலில் இன்னொன்று நிற்கக்கூடியவை. ஒட்டகங்களின் வியர்வைகூட விரயமாக்கப்படுவதில்லை. ரோமத்தின் அடிப்பகுதியில் வெளிப்படும் வியர்வை, ஒட்டகத்தின் உடலை வெகுநேரம் குளிர்ச்சியாக வைத்திருக்கும். பாலைவனத்தில் எங்காவது ஒரு பகுதியில்தான் தண்ணீர் கிடைக்கும். அப்படி கிடைக்கும்போது, 13 நிமிடங்களில் 113 லீற்றர் தண்ணீரை உறிஞ்சிக் குடித்துவிடும் அசாத்திய திறமை வாய்ந்தது ஒட்டகம்.

Post a Comment

Previous Post Next Post