பிரபல மனிதர்களின் பிறந்தநாட்கள் தொடங்கி, வரலாற்றில் முக்கியமான நாட்கள், அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படும் பண்டிகை தினங்கள், சமகால நிகழ்வுகள் என அனைத்திற்கும் மரியாதை அளித்து தனது டூடுல்களின் மூலம் கௌரவப்படுத்துகிறது கூகுள். சமகால இணைய உலகில் இதை ஒரு கலாசாரமாகவே கொண்டிருக்கும் "கூகுள், இந்த டூடூல்களை எப்போது அறிமுகப்படுத்தியது? என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தது? என்று பார்க்கும் கட்டுரை தான் இது.
ஆரம்பக் காலத்தில் கூகுளின் சர்வர்கள் கிராஷ் ஆவதும், உடனே அதை லேரியும், செர்ஜியும் சரி செய்வதும் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு. அப்படி ஒரு இக்கட்டான காலகட்டமான 1998இல், இருவருக்கும் நெவாடா பாலைவனத்தில் வருடந்தோறும் நடக்கும் ‘பர்னிங் மேன் பெஸ்டிவல்' (Burning Man Festival) என்ற புகழ்பெற்ற விழாவில் கலந்துகொள்ள ஆசை. ஆனால் அந்த நேரத்தில் சர்வர்கள் கிராஷ் ஆகி விட்டால்? மக்களுக்கு தாங்கள் அலுவலகத்தில் இல்லை, சர்வர்கள் கிராஷ் ஆனாலும் இப்போது சரி செய்ய இயலாது என்பதைத் தெரிவிக்கவேண்டுமே? அப்போது தான் தோன்றியது டூடுல் ஐடியா.
அதே 'பேர்னிங் மேன்' விழாவின் லோகோவை எடுத்து தங்கள் கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது '0'விற்கு பின்னால் குறியீடாக வைத்துவிட்டு நெவாடா பறந்துவிட்டனர் இருவரும். மக்களும் அந்த குறியீட்டை சரியாக புரிந்து கொண்டனர். பலர் அந்த நகைச்சுவை கலந்த கற்பனைத் திறனை வெகுவாகப் பாராட்டினார். கூகுள் டூடுலின் முதல் வெற்றி இதுதான்.
அதன்பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 2000ஆம் வருடம், கூகுளில் இன்டெர்ன்னாக பயிற்சிபெற வந்திருந்த டெனிஸ் வாங் என்பவரிடம் பிரான்சிய தேசிய தினமான போஸ்டில் டே விற்கு (Bastille Day) ஒரு டூடுல் வடிவமைக்குமாறு கட்டளை வருகிறது. அதை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கிறார் டெனிஸ். மக்களும் அதற்கு பேராதரவு அளிக்க டெனிஸயே தலைமை டூடுலாராக ஆக்கிவிடுகிறார்கள் லேரியும், செர்ஜியும். மிகவும் எளிமையான முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த டூடுல் கலாசாரம் இப்போது பல்வேறு டெக்னோலஜிகள் உதவியுடன் உச்சம் தொட்டிருக்கிறது.
முதல் டூடுல்
"இதைத்தான் தினமும் செய்கிறோம். இன்று இதையே கொஞ்சம் புதுமையாக செய்யலாமே'' என்று உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? கூகுளின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஆகிய இருவருக்கும் இப்படி யோசிப்பது தான் அன்றாட வேலையே.ஆரம்பக் காலத்தில் கூகுளின் சர்வர்கள் கிராஷ் ஆவதும், உடனே அதை லேரியும், செர்ஜியும் சரி செய்வதும் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு. அப்படி ஒரு இக்கட்டான காலகட்டமான 1998இல், இருவருக்கும் நெவாடா பாலைவனத்தில் வருடந்தோறும் நடக்கும் ‘பர்னிங் மேன் பெஸ்டிவல்' (Burning Man Festival) என்ற புகழ்பெற்ற விழாவில் கலந்துகொள்ள ஆசை. ஆனால் அந்த நேரத்தில் சர்வர்கள் கிராஷ் ஆகி விட்டால்? மக்களுக்கு தாங்கள் அலுவலகத்தில் இல்லை, சர்வர்கள் கிராஷ் ஆனாலும் இப்போது சரி செய்ய இயலாது என்பதைத் தெரிவிக்கவேண்டுமே? அப்போது தான் தோன்றியது டூடுல் ஐடியா.
அதே 'பேர்னிங் மேன்' விழாவின் லோகோவை எடுத்து தங்கள் கூகுள் லோகோவில் உள்ள இரண்டாவது '0'விற்கு பின்னால் குறியீடாக வைத்துவிட்டு நெவாடா பறந்துவிட்டனர் இருவரும். மக்களும் அந்த குறியீட்டை சரியாக புரிந்து கொண்டனர். பலர் அந்த நகைச்சுவை கலந்த கற்பனைத் திறனை வெகுவாகப் பாராட்டினார். கூகுள் டூடுலின் முதல் வெற்றி இதுதான்.
அதன்பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 2000ஆம் வருடம், கூகுளில் இன்டெர்ன்னாக பயிற்சிபெற வந்திருந்த டெனிஸ் வாங் என்பவரிடம் பிரான்சிய தேசிய தினமான போஸ்டில் டே விற்கு (Bastille Day) ஒரு டூடுல் வடிவமைக்குமாறு கட்டளை வருகிறது. அதை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கிறார் டெனிஸ். மக்களும் அதற்கு பேராதரவு அளிக்க டெனிஸயே தலைமை டூடுலாராக ஆக்கிவிடுகிறார்கள் லேரியும், செர்ஜியும். மிகவும் எளிமையான முறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த டூடுல் கலாசாரம் இப்போது பல்வேறு டெக்னோலஜிகள் உதவியுடன் உச்சம் தொட்டிருக்கிறது.
சந்தித்த நெருக்கடிகள்
கூகுள் டூடுல்கள் பெரும் வரவேற்பு பெற்று வந்தாலும் அவ்வப்போது பல பிரச்சினைகளையும், பல்வேறு விமர்சனங்களையும் சந்திப்பது உண்டு. கடந்த செப்டம்பர் 13, 2007 அன்று ரோல்ட் டாஹ்ல் (Roald Dahl) எனப்படும் பிரபல ஆங்கில எழுத்தாளரை கௌரவிக்க டூடுல் ஒன்றை வைத்தது. துரதிஷ்டவசமாக, அன்று யூதர்களின் புத்தாண்டும் கூட. அதுமட்டுமல்லாது, ரோல்ட் டாஹ்ல் யூதர்களின் நாடான இஸ்ரேலின் எதிர்ப்பாளர் வேறு! உடனே கிளம்பியது எதிர்ப்புகள். வேறு வழியின்றி, மதியம் 2 மணிக்கே ரோல்ட் டாஹ்லின் டூடுலை நீக்கியது கூகுள். அது மட்டுமல்லாது அமெரிக்காவின் முக்கிய தினங்களான மெமோரியல் டே (Memorial Day) மற்றும் வெட்டறன்ஸ் டே (Veterans Day) போன்றவற்றிற்கு டூடுல் வைத்து மதிப்பளிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்த வருடமே வெட்டறன்ஸ் டேவிற்கு டூடுல் வைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது கூகுள்.
கடந்த மார்ச் 31, 2013 அன்று தொழிலாளர்கள் தலைவரும், ஐக்கிய பண்ணை தொழிலாளர்கள் சங்கத்தின் துணை நிறுவனருமான சீசர் சாவேஸ் (Cesar Chavez) அவர்களுக்கு டூடுல் வைத்து கௌரவித்தபோது, புனித நாளான ஈஸ்டரை ஏன் மதிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதன்பிறகு, மே 19, 2016 அன்று ஆசிய-அமெரிக்க ஆர்வலரான யூரி கோச்சியமா (Yuri Kochiyama) அவர்களுக்கு கூகுளின் அமெரிக்க முகப்பு பக்கத்திலேயே டூடுல் வைத்த போது, பலரும் நேரடி எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் அவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதரவு தெரிவித்தவராம்.
இந்தப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, கூகுள் வெள்ளைக்காரர்களை மட்டுமே டூடுல் வைத்துக் கொண்டாடுகிறது. கறுப்பர்களையோ, மற்ற நாட்டவர்களையோ கவனிக்கத் தவறிவிட்டது என்பது போன்ற பிரச்சினைகளும் அவ்வப்போது தலைகாட்டும். எது எப்படி இருந்தாலும், கூகுள் டூடுல்களின் மதிப்பு மட்டும் நாளுக்குநாள் கூடிக் கொண்டேதான் இருக்கிறது. கூகுளும் அதைத் தக்கவைக்கும் வண்ணம் அனிமேஷன் முதல் பல்வேறு விடியோக்கள், குஷிப்படுத்தும் விளையாட்டுகள் என புதுப்புது விடயங்களை புகுத்திக்கொண்டேதான் இருக்கிறது! நாமும் அதை வரவேற்கும் விதமாக, குறைகூறுவதை நிறுத்திவிட்டு கலையை மட்டும் ரசிக்கலாமே?

Tags:
Tamil WriteUps