The Secret History Of Cigarette Smoking

"நான் தான் முகேஷ்" என்று நான் சொன்னவுடன் உங்களுக்கு தோன்றும் முதல் வார்த்தை திரையரங்கில் திரை இடப்படும் அந்த புகையிலை விளம்பரம். இந்த சிகரெட் கலாச்சாரம் எப்படி இங்கு வந்தது? திரையில் நமது கதாநாயகன் சிகரெட் பிடித்தால் அதை பார்த்து பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து "டேய் சும்மா அடிச்சு பாருடா" என்று சொல்லும் நண்பர்கள் வரை அவர்களால் புகைப்பவர்கள் ஏராளம். சிகரெட் மோகம் என்றும் குறையாது. எல்லாம் நாகரிகம் என்று நினைப்பது வரை "பத்த வச்சு புகையை விட்டா பவர் கிக்கு" என்று ஸ்டைலாக புகை பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இந்த சிகரெட் ஆரம்ப வரலாற்றையும், அதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

The Secret History Of Cigarette Smoking

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த சிகரெட் எப்படி உலகமெங்கும் வந்தது என்பதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே புகையிலை பயன்பாடு இருந்து வருவதாக வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் புகையிலையை கடவுளின் கொடை என நினைத்திருக்கிறார்கள். வலி நிவாரணியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். காயங்கள், பல்வலி, இன்னபிற உபாதைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தி இருக்கிறார்கள். பண்டமாற்று முறையில் புகையிலையை கொடுத்து, பொருட்களை வாங்கி இருக்கிறார்கள். புகையிலையை ஆபத்தான பொருள் என அப்போது யாரும் உணரவில்லை. புகையிலை சத்தம் இல்லாமல் பல காரியங்களை ஆதிகாலத்தில் இருந்து நிகழ்த்தி இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால், புகையிலை பல நாடுகளையும் பணக்காரர்களையும், வல்லரசுகளையும் உருவாக்கி இருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஸ்பெயின்(Spain) நாட்டில் உள்ள செவில்லேவில்(Seville) அங்குள்ள பணக்கார மக்கள் பயன்படுத்தி தூக்கி எறிந்த சிகார்(Cigar) துண்டுகளை பிச்சைக்காரர்கள் சேர்த்து காகிதத்தில் சுருட்டி அதை புகைத்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த சிறிய காகித சுருட்டுகள் சிகரெட் ஆக மாறியது. மற்றும் அவற்றின் பயன்பாடு இத்தாலி(Italy) போர்ச்சுகளுக்கு(Portugal) பரவியது. இப்படியாக தான் சிகரெட் கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது.

இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு ஆறு புள்ளி ஐந்து லட்சத்திற்கும்(6.5 lakhs Indians) அதிகமான மக்களை வெறும் புகைப்பழக்கம் மட்டுமே கொல்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புகையிலை மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் சிகரெட் மட்டுமின்றி சாக்லேட்(Chocolate), எலக்ட்ரிக் சிகரெட்(Electric cigarette), சிகார்(Cigar) என இன்னும் நிறைய உள்ளன. 

சிகரெட் பாதிப்புகள் குறித்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பெரிய விழிப்புணர்வுகளோ, விளம்பரங்களோ இல்லாமலே இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் பல நிறுவனங்கள் சிகரெட் தயாரிப்பில் இறங்கின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இன்றைக்கு சிகரெட் தயாரிப்பில் உலகில் முதல் நிறுவனமாக இருக்ககூடிய இம்பீரியல்(Imperial) நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதை அப்போது முன்னணியில் இருந்த பக் டியூக்(Buck Duke) என்ற நிறுவனம் எதிர்த்தது. ஆனாலும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளால் இரண்டு நிறுவனங்களும் இணைந்து தங்களுடைய சிகரெட் பொருட்களை பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ கம்பெனி(British American Tobacco Company) என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனை செய்வது என ஒப்பந்தம் செய்துகொண்டனர். 

தொழில் போட்டியை சமாளிக்க ஆயிரத்தி தொள்ளாயிரத்தி இரண்டாம் ஆண்டு(1902) பிலிப் மோரிஸ்(Philip Morris) நிறுவனம் இப்போது முன்னிலையில் இருக்கின்ற மார்ல்போரோ(Marlboro) சிகரெட்டை தனி பிராண்டாக(Brand) அறிமுகப்படுத்தியது. புகையிலைக்கு விளம்பரம் செய்யக்கூடாது என்று தடை அப்போது இருந்த போது ஒரு கவர்ச்சிகரமான கவ்பாய்(Cowboy) கையில் மார்ல்போரோ(Marlboro) சிகரெட்டை கொடுத்து புகைக்க சொல்லி அதை படமாக எடுத்து புதுவிதமாக அதை விளம்பரப்டுத்தினர். இது அந்த மார்ல்போரோ(Marlboro) சிகரெட்டை அதிகம் பயன்படுத்துவதற்கு தூண்டியது. இதனால் மார்ல்போரோ(Marlboro) நிறுவனத்தின் வருமானம் கிடுகிடுவென உயர்ந்தது. 

இந்தியாவில் புகையிலை, பதினேழாம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கீசியர்களால்(Portuguese) அறிமுகப்படுத்தபட்டது. இந்திய புகையிலை ஆனது உலகம் முழுவதிலும் சுவை மற்றும் மென்மையான தன்மைக்கு பிரபலமானது. தென்கிழக்கு ஆசியா(Southeast Asia), கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா(Eastern and Western Europe) மற்றும் ஆப்பிரிக்காவில்(Africa) இந்திய புகையிலைக்கு பெரும் தேவை இருக்கிறது. இந்தியாவின் ஆண்டு உற்பத்தி சுமார் எட்டு லட்சத்தி முப்பதாயிரம் மெட்ரிக் டன்கள்(8.3 Lakhs Metric Tons). 

இப்போது மட்டுமல்ல, அந்த காலத்திலிருந்தே நம் மக்களிடம் இதை செய்யாதே என்று சொன்னால் அதை வீம்புக்கு என்றே செய்வார்கள். இப்படியாக ஆரம்பித்த இந்த சிகரெட் மோகத்தை நம்மால் மட்டுமே தடுக்க முடியுமே தவிர தானாக அழியாது. சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும். சீக்கிரம் இறந்துவிடுவோம் என்ற அறிவுரை எல்லாம் உங்களுக்கு நான் சொல்லவில்லை. உங்களுக்கு அதிக நாள் வாழ வரம் வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி இருக்கிறது. அதற்கு புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். அவ்வளவு தான்.

Post a Comment

Previous Post Next Post