பொலித்தீன் பாவனையைக் கட்டுபடுத்துவோம்.

இன்று நாம் வாழும் இவ்வுலகில் அதிகளவிலான பிரச்சனையிற்கு பொலித்தீன் பாவனை பெரிதும் பங்குவகிக்கின்றது. இவ் பொலித்தீனானது சூழலை மாசுபடுத்துவதில் ஓர் பாரிய பங்குவகிக்கின்றது. இவை இலகுவில் உக்கலடையாததன் காரணமாக இவற்றை கழிவு முகாமைத்துவம் செய்வதால் பாரிய அளவிலான சிக்கல்கள் காணப்படுகின்றன. இதனால் சூழல் பல வகைகளிலும் மாசடைகின்றது. சில உயிரங்கிகளும் இதனால் உயிரிழக்கின்றன. பொலித்தீனை கட்டுப்படுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

பொலித்தீன் பாவனையைக் கட்டுபடுத்துவோம்.

பொலத்தீனானது பல வகைகளிலும் நமக்கு நன்மை பயக்கின்றது. இவை நமக்கு இலகுவில் கிடைப்பதனால் இவற்றை நாம் எளிதில் கழிவாக வீசிவிடுகின்றோம். இவை நமக்கு குறைந்தளவு பணத்திலும், பாரிய வேலைகளையும் செய்கின்றன. உதாரணமாக இவை நேரத்தை மீதப்படுத்தவும், பல பொருட்களை ஒன்றாக கொண்டு செல்லவும், பயன்படுத்த இலகுவாகவும் இருக்கின்றன. இவ்வாறு நமக்கு பலவகைகளில் உதவுவதால் இவைகளால் தீமைகள் ஏற்படாது என எண்ணக்கூடாது. இவையால் கிடைக்கும் நன்மைகளைவிட தீமைகளே அதிகமாகக் காணப்படுகின்றது.

பொலித்தீன்கள் உக்கலடையாது காணப்படுவதால் இவை சூழல் மாசடைய முக்கியமான காரணமாக இருக்கின்றது. இவைகளின் உற்பத்திச் செலவைவிடக் கழிவு முகாமைத்துவ செலவு அதிகமாகக் காணப்படுகின்றது. பொலித்தீன்கள் சூழலில் அங்கும் இங்கும் பரந்து இருப்பதால் இவற்றை உண்ணும் கால்நடைகள் இறக்கின்றன. இவ்வாறு இருக்கும் பொலித்தீன்களில் நீர் தேங்கி டெங்கு நுளம்பு பரவலுக்கு துணையாகின்றது. இப் பொலித்தீன் கழிவுகளை எரிப்பதால் வளி மாசடைவதோடு புதைப்பதால் மண்வளம் குறைகின்றது. இக் கழிவுகளை கழிவு முகாமைத்துவம் செய்வது மிகவும் கடினமான ஓர் விடயமாகும்.

“சுத்தம் சுகம் தரும்” என்னும் கூற்றுக்கு இணங்க பொலித்தீன் பாவனையைக் கட்டுபடுத்த வேண்டும். இவற்றை பயன்படுத்தாது மாற்றுவழிகளைப் பயன்படுத்துவதால் பொலித்தீன் பாவனையை குறைத்துக் கொள்ள முடியும். இக் காலங்களில் பல்வேறு வகைகளிலும் சூழலில் பொலித்தீன் கழிவுகள் சேர்ந்து கொண்டே வருகின்றன. இதனால் பல உயிரினங்களின் நிலவுகைக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. நாம் பாவிக்கும் ஒவ்வொரு பொலித்தீனும் ஒவ்வொரு உயிரைக் கொல்கின்றது என எண்ணி பொலித்தீன் பாவனையைக் குறைப்போம். இது நம் எதிர்கால சந்தியினருக்கு நன்மை பயக்கக் கூடிய செயலாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post