Success story of SUNDAR PICHAI

"எங்கு பிறக்கிறோம் எப்படி வாழ்கிறோம் என்பதில் நமது வெற்றியை நிர்ணயிக்காது. நமது கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் தான் நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்." இதை மெய்ப்பட நிஜவாழ்க்கையில் காட்டிய தற்போதைய கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை பற்றி தெரிந்துகொள்வோம்.

Success story of SUNDAR PICHAI

இந்தியாவின் தென் தமிழகத்தில் உள்ள மதுரை எனும் மாநகரத்தில் ஜூலை மாதம் இரண்டாம் தேதி 1972 இல் பிறந்தவர் தான் பிச்சை சுந்தரராஜன் தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமியுடன் சென்னையில் வளர்ந்துள்ளார். தன் பள்ளிப் பருவத்தில் தொலைக்காட்சி,கார் போன்றவற்றில் வாசம் தெரியாத அவருக்கு வீட்டிலிருந்து தொலைபேசி மட்டும்தான் பொழுதுபோக்கு அவ்வாறு வந்த தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்யும் பழக்கம். இளம் வயதிலேயே கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உடையவர் சுந்தர் பிச்சை. புத்தகம் படிக்கும் ஆர்வம் கொண்ட இவர் விடுமுறை நாட்களில் கூட புத்தகத்தை மட்டுமே நாடியதால் நட்பு வட்டாரம் இல்லாமல் போனது. இவருக்கு மின் பொறியாளராக இவர் தந்தை தினமும் தன் வேலையில் சந்திக்கும் சவால்களை வீட்டில் அவருடன் பகிர்ந்து கொள்வார். இதனால் சுந்தர் பிச்சைக்கு அறியாமலேயே தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அவர் தன் கல்லூரிப் படிப்பை ஐ.ஐ.டி கரக்பூரில்(IIT Kharagpur) தொடர்ந்துள்ளார். உலோகவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து படிக்கும்போதே மின்னணு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்று 1993இல் வெள்ளிப் பதக்கம் பெற்ற பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் (Stanford University) முதுகலைப் பட்டம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதை தவற விடாமல் ஏற்றுக்கொண்டார் சுந்தர் பிச்சை மேலும் அவர் MBA படிப்பை பென்சில்வேனியாவில்(University of Pennsylvania) படித்து பட்டம் பெற்றுள்ளார். PhD படிப்பை தொடர ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் வாய்ப்பு கிடைத்தும் சுந்தர்பிச்சை அதை தவிர்த்து விட்டாராம். காரணம் IITயில் காதலித்த அஞ்சலியை திருமணம் செய்ய அவருக்கு ஒரு நிரந்தர வேலை தேவைப்பட்டுள்ளது. அவ்வாறு மெக்கன்சி அண்ட் கம்பெனியில்(McKinsey & Company) வேலை ஒன்றில் சேர்ந்து அஞ்சலியை திருமணம் செய்துள்ளார் சுந்தர் பிச்சை தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Success story of SUNDAR PICHAI

2004ம் ஆண்டு கூகுள் தயாரிப்பு மேலாளராக சேர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை கூகுள் டூல்பார்(google toolbar) தயாரிக்கும் பணியில் சிறிய குழுவினர் கொண்டு வேலை செய்தார். அப்போதிருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசரை தகர்த்தெறிந்து கூகுளை கொடிநாட்ட 2008ஆம் ஆண்டு கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் OS போன்ற தயாரிப்புகளை செய்து பிரபலமானார் சுந்தர் பிச்சை. இதனால் 2008இல் vice-president என்ற பதவி உயர்வு பெற்று அதன் பின் உருவான ஜிமெயில்,கூகுள் டாக்ஸ் போன்றவற்றுக்கும் தலைமை வகித்தார்.

இதோடு நிற்காமல் மேலும் 2013இல் ஆண்ட்ராய்டு பொறுப்பும் வந்து சேர அக்டோபர் 2014இல் Product Chiefஆக உயர்வு பெற்றுள்ளார். சுந்தர் பிச்சையின் கடின உழைப்பும் ஆர்வமும் கூகுளின் CEO Larry Pageஐ புதுநிறுவனம் ஒன்றை உருவாக்க தூண்டியுள்ளது. Alphabet Inc என்று கூகுளின் கிளை நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்தின் CEOவாக சுந்தர் பிச்சை 10 ஆகஸ்ட் 2015 நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு பிச்சைக்கு 2 லட்சத்து 73 ஆயிரத்து 328 பங்குகள் தரப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் அதன் தற்போதைய மதிப்பு 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். சுந்தர் பிச்சையின் சம்பளம் ஒரு ஆண்டு கணக்கின்படி 6 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Success story of SUNDAR PICHAI

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் CEO போட்டியாளர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவராக 2014ஆம் ஆண்டு பங்கு கொண்டுள்ளார். ஆனால் அப்போது சத்யா நாதெல்லா(Satya Nadella) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ட்விட்டர் நிறுவனமும் சுந்தர் பிச்சையை தன் நிறுவனத்தின் உயர் பதவியை கொடுத்து தன் வசமாக்க வேண்டும் என முயற்சித்ததாகவும் ஆனால் கூகிள் அதிக சம்பளம் கொடுத்து அவரை தக்க வைத்துக் கொண்டதாகவும் ஒரு வதந்தி உலா வந்தது. இன்றும் சுந்தர் பிச்சை தான் படித்த IITகல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் ஸ்கைப்(Skype) மூலம் பேசி ஆலோசனைகளை கூறி தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார். சுந்தர் பிச்சையின் தந்தையின் சிறுவயதில் பகிர்ந்து கொண்ட சவால்கள் அவருக்கு ஆர்வத்தை தூண்டியதோடு அதனை நோக்கி பயணிக்கும் பாதையையும் கொடுத்துள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சுந்தர் பிச்சைக்கு அமெரிக்கா என்பது வெறும் சொப்பனமாக மட்டுமே இருந்திருக்கும். அவரது ஆர்வம் மற்றும் விடா முயற்சிதான் இன்று புகழின் உச்சிக்கு அவரை கொண்டு சேர்த்தது. இது சுந்தர் பிச்சைக்கு மட்டுமல்ல ஒரு தமிழனாக தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது.

Post a Comment

Previous Post Next Post