History Of redBus

ஒவ்வொரு நிறுவனமும், அவர்கள் கடந்து வந்த பாதையை நாமும் கற்றுக் கொண்டோமேயானால், அதே மாதிரியான பாதையை நாம் சந்திக்கின்ற போது அவர்கள் எப்படி அதை அணுகினார்கள் என்பதைக்கொண்டு அதே மாதிரியாகவோ அல்லது அதைவிட மேலாகவோ நாம் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்கலாம் தீர்வும் காணலாம்.

History Of redBus
பனிந்திர ஷாமா (Phanindra Sama) என்பவரால் 2006இல் உருவாக்கப்பட்ட நிறுவனமே redbus.com. இன்று இந்த பனிந்திர ஷாமா " Chief innovation officer'' எனும் பதவியில் தெலுங்கானா அரசாங்கத்தில் உள்ளார். நிறைய பேட்டிகளின் போது ஷாமா தன்னை ஒரு எதிர்பாராத தொழிலதிபர் என்று சொல்வதுண்டு. ஏனெனில் படிப்பில் படு சுட்டியான ஷாமா , நன்கு படித்து "texas instruments" எனும் நிறுவனத்தில் Chief engineerஆக வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, தான் ஒரு தொழிலதிபராக வரப் போகிறோம் என கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார். தன் வாழ்க்கையில் சந்தித்த ஓர் கசப்பான அனுபவத்தை பயன்படுத்தி இந்த நிறுவனத்தை உருவாக்கி , சில ஆண்டுகளில் இதை விற்கும் போது வருடத்திற்கு நூறு மில்லியன் டிக்கட்ஸ் இந்த நிறுவனம் மூலம் விற்கப்பட்டது. சுமார் ஆயிரம் கோடிகளுக்கு இந்த நிறுவனத்தினை விற்றார் ஷாமா.

பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஷாமா வருடாவருடம் தீபாவளிக்கு ஊருக்கு (ஹைதராபாத் ) செல்வது வழக்கம். 2005ஆம் ஆண்டும் அவ்வாறே தீபாவளிக்கு முதல் நாள் இரவு வரை கட்டாயம் முடிக்க வேண்டிய அலுவலக வேலைகள் இருந்ததால் எல்லாவறையும் முடித்து விட்டு அவசர அவசரமாக கிளம்பி பேரூந்து நிலையம் சென்று, டிக்கெட் வாங்க எத்தனித்தபோது எல்லா டிக்கெட்டுகளுமே விற்றுத் தீர்ந்து விட்டதாய் பதில் சொல்லப்பட , ஷாமாவும் அந்த பேரூந்து உரிமையாளரிடம் ஹைதராபாத் செல்லும் வேறு ஏதேனும் பேரூந்தில் டிக்கெட் கிடைக்குமா என கேட்கிறார் . அவரும் தனக்கு தெரிந்த சில பேரூந்து உரிமையாளர்களுக்கு அழைப்பெடுத்து விசாரிக்க , அவர்களிடமும் டிக்கெட்ஸ் இல்லை என்கிற பதிலே வருகின்றது. எப்படியாவது ஊர் போய் சேர்ந்து விடவேண்டும் என்கிற பதட்டத்தில் ஷாமா தானும் வேறு பேரூந்து உரிமையாளர்களிடமும் விசாரிக்க , டிக்கெட் இல்லை என்கிற பதிலே வருகின்றது. வெறுத்துப் போன ஷாமா திரும்பி தன் அறைக்கே வந்துவிடுகின்றார். ஆனாலும் மனிதருக்கு அன்றிரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவேயில்லை , இவ்வளவு அட்வான்ஸ்சான ஒரு காலகட்டத்தில் ஏன் எந்த பேரூந்தில் டிக்கெட்ஸ் இருக்கின்றது எதில் டிக்கெட்ஸ் இல்லை என கண்டு பிடிக்க முடியவில்லை.

History Of redBus
ஏன் அந்தமாதிரியான ஒரு சிஸ்டம் இல்லை என்கிற கேள்வி அவர் மனதுக்குள் எழுகின்றது நிச்சயமாக இரவு ஹைதராபாத் நோக்கி சென்ற பல பேரூந்துகளில் ஏதேனும் ஒன்றிலாவது ஒரு இருக்கையாவது காலியாக சென்றிருக்கக்கூடும். அது எந்த பேரூந்து என அறிந்து கொள்ளும் வகையில் சரியான ஒரு தொடர்பாடல் சிஸ்டம் இருந்திருந்தால் நானும் இந்நேரம் ஊர் போய் சேர்ந்திருக்கலாம். அந்த பேரூந்து உரிமையாளருக்கும் டிக்கெட் விற்றிருக்கும். இது ஏன் சாத்தியப்படவில்லை? இந்த பிரச்சினைக்கு நாம் ஏன் ஒரு தீர்வு காணக்கூடாது? என நினைத்தார் ஷாமா . இதை ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக பார்த்தார் அவர் . உடனே தன் நண்பர்கள் சிலருடன் கலந்து பேசி இதற்காக ஒரு "'software' தயாரிக்க முன்வருகின்றனர் . அதுவும் "open source'' வகை - அதாவது எந்தவொரு வருமானத்தையும் எதிர்பாராத இலவச software.

Software உருவாக்குவது என முடிவெடுத்த பின், சில ட்ராவெல் ஏஜென்ட்களிடம் சென்று, இந்த பிஸினஸினை எவ்வாறு செய்கிறீர்கள் என வினவ, அவர்களும் மேலோட்டமாக சில விடயங்களை கூறி அனுப்பிவைர்த்து விட்டனர். ஷாமாவும் அவர்கள் கூறிய விடயங்களை வைத்து கிட்டத்தட்ட எட்டு மாதகால அவகாசத்தில் ஒரு websiteடினை உருவாக்குகின்றார். Software உருவாக்கும் அளவிற்கு ஷாமாவிடம் கம்ப்யூட்டர் பற்றிய அறிவில்லாமல் இருந்தபோதிலும் , இப்படியொரு websiteடினை உருவாக்கியே தீரவேண்டும் எனும் விடாமுயற்சியில் நிறைய software சம்பந்தமான புத்தகங்களை படித்து நிறைய விடயங்களை தெரிந்து கொண்டு குறிப்பிட்ட websiteடினை உருவாக்க வேண்டியிருந்தமையினாலேயே இந்த எட்டுமாத காலதாமதம்.

Software தயாரானதும் ஷாமா அதை கொண்டு சென்று பேரூந்து உரிமையாளர்களிடம் கொடுக்க, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், பேரூந்தில் பயணம் செய்வோரில் பெரும் பாலானோர் படிப்பறிவில்லாத பாமரர் - அவர்கள் website  இல் டிக்கெட் புக் செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாதவொன்று மேலும் இந்த சிஸ்டத்தினை வாங்கி அதை இயக்க ஒரு கம்ப்யூட்டர் , ஒரு ஊழியர் என செலவை அதிகரிக்கும் செயல் என பஸ் உரிமையாளர் தரப்பிலிருந்து காரணம் சொல்லப்பட்டது எல்லோரும் நன்மையடைவார்கள் என்ற நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு இலவசமாக கொடுக்க முயன்றும்கூட யாரும் பயன்படுத்திப்பார்க்கக்கூட முன்வரவில்லையே? என ஷாமா மிகவும் நொந்து போனார். கிட்டத்தட்ட எட்டு மாத உழைப்பும் வீண். எனினும் இதற்கெல்லாம் மனமுடைபவரா ஷாமா ? பல நண்பர்கர்களிடம் விடயத்தைக்கூறி இதற்கு ஏதேனும் தீர்விருக்கின்றதா எனக் கேட்ற்கின்றார். அப்போதுதான் நண்பர் ஒருவர்மூலம் " TIE" நிறுவனம் பற்றி கேள்விப்படுகின்றார்.

TIE என்பது America silicon valley இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற நிறுவனம் . உடனே ஷாமா அவர்களை அணுகி தன் எண்ணத்தினை வெளியிட, அவர்களும் அவரை தங்களுடைய உறுப்பினராக இணைத்துக்கொண்டு மூன்று அனுபவஸ்தர்களை மேற்படி திட்டத்தினை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்வதென கலந்தாலோசிக்கவென ஷாமாவுக்காக பரிந்துரைக்கின்றனர். அந்த மூவரிடமும் ஷாமா தன் திட்டத்தினை விவரிக்கின்றார். திட்டம் முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த ஆலோசகர்கள் முதலில் ஷாமாவிடம் கூறியது என்ன தெரியுமா? "முதலில் non profit என்கிற ஐடியாவை விட்டுவிடுங்கள் , இதை ஒரு வருமானம் ஈட்டும் திட்டமாக யோசியுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைக்கின்ற விடயத்தினை சரிவர செய்யமுடியும்'' என்றனர் ஆலோசகர்கள் ! அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி "உங்களுடைய industry அளவு என்ன? என்பது. அதாவது ஒருநாளில் எத்தனை பேரூந்துகள் ஓடுகின்றன ? எந்தெந்த ரூட்டில் ஓடுகின்றன ? கிட்டத்தட்ட ஒருநாளில் எத்தனை பயணிகள் பயணிக்கின்றனர் ? உங்கள் softwareஐ எத்தனை பேர் பயன்படுத்துவார்கள். போன்ற கேள்விகளை கேட்க , ஷாமாவும் இதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவேயில்லை என்கிறார். உடனே ஆலோசகர்கள் "இதைப்பற்றியெல்லாம் முதலில் தெரிந்து கொண்டு வாருங்கள், பிறகு விரிவாக பேசலாம் என்றனர். உடனே ஷாமா google செய்து பார்க்கின்றார். ஆனால் , எந்த தகவலுமே கிடைக்கவில்லை . ஆயினும் சற்றும் மனம் தளராது, மீண்டும் பேரூந்து உரிமையாளர்களிடம் சென்று விசாரிக்கின்றார்.

அவர்களுடன் பேசி எத்தனை பேரூந்துகள் தோராயமாக ஓடுகின்றன போன்ற தகவல்களை அண்ணளவாக எடுத்துக்கொள்கின்றார் . மீண்டும் ஆலோசகர்களை சந்தித்து தான் சேகரித்த தகவல்களை அவர்களிடம் கொடுக்க, அவர்களும் "நீங்கள் ஆரம்பிக்கப் போகும் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர வாய்ப்புண்டு, எனவே இதனை ஓர் வருமானம் தரக் கூடிய நிறுவனமாக ஆரம்பியுங்கள் எனக்கூறுகின்றனர்.

History Of redBus
மேலும், இலவசமாக ஒரு software கொடுக்க முன்வந்தபோதிலும் ஏன் எந்த பேரூந்து உரிமையாளர்களுமே இவரது திட்டத்தினை ஏற்க முன்வரவில்லை ? என்கிற கேள்வியை முன் வைத்த அவர்கள் , பேரூந்து உரிமையாளர்களது நோக்கம் தொழிலை விரிவுபடுத்தி சவுகரியங்களை ஏற்படுத்திக்கொடுப்பதல்ல. அவர்களது நோக்கம் இருக்கின்ற எல்லா டிக்கெட்களையும் விற்றுவிட வேண்டும் என்பதே. ஆகவே முதலில் உங்கள் softwareஐ பயன்படுத்தி நீங்களே டிக்கெட்ஸ் விற்றுக்காட்டுங்கள் , அப்போதுதான் பேரூந்து உரிமையாளர்களது கவனத்தினை நீங்கள் ஈர்க்க முடியும் என்றனர். அதன்படி 2006 ஆம் ஆண்டு redbus.com என்கிற பெயரில் தன் நிறுவனத்தினை ஆரம்பிக்கின்றார் ஷாமா. அதென்ன redbus? சிம்பிள், ஷாமாவிற்கு மிகவும் பிடித்த நிறம் red! ஆக, தன் நிறுவனத்திற்கும் அந்த பெயரையே வைத்துவிடுகின்றார். அந்த பெயரும் கூடிய விரைவில் எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்தது. முதலில் ஷாமா தன்னிடம் நிறைய டிக்கெட்ஸ் இருப்பது போன்ற பாவனையை ஏற்படுத்திக்கொண்டு , ஒவ்வொரு பயணியும் டிக்கெட்ஸ் புக் செய்ய செய்ய , ஷாமா பேரூந்து உரிமையாளர்களை தொடர்புகொண்டு ஒவ்வொரு டிக்கெட்களையும் பெற்றுக்கொள்கின்றார் . கொஞ்சம் கொஞ்சமாய் பேரூந்து உரிமை யாளர்கள் ஷாமாவை கவனிக்க ஆரம்பித்தனர்.

யார் இவர் ? ஒருநாளில் இத்தனை டிக்கெட்ஸ் வாங்குகிறாரே? என கவனிக்க ஆரம்பித்த பஸ் உரிமையாளர்களிடம் ஷாமா மெல்ல மெல்ல தன் websiteடினை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார் . பேரூந்து நடத்துனர்களாக அதிகம் படித்தவர்களெல்லாம் வேலைக்கு வரப்போவதில்லை அல்லவா? ஆகவே அவர்களும் எளிதாக டிக்கெட்ஸ் புக் செய்யும் வகையில் எளிமையானதாக இந்த software வடிவமைக்கப்பட்டிருந்தது . சிவப்பு நிறம் என்றால் குறிப்பிட்ட இருக்கை காலியாக இல்லை என்றும், பச்சை நிறம் என்றால் அந்த இருக்கை இன்னும் புக் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் இலகுவில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது . மேலும் பயணிகளின் feedbackஐ மிக கவனமாக அவதானித்து அதற்கேற்றவாறு செயற்படவும் தவறவில்லை ஷாமா , உதாரணத்திற்கு, பெண்கள் நிறைய பேர் தனியாக பயணித்தனர் என்பதால் அவர்களது பக்கத்து இருக்கையில் பயணிக்கப் போவது ஒரு ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்ளும் சிஸ்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான "handicap seat'' என பல விடயங்களை ஷாமா தன் திட்டத்தில் உற்படுத்தியிருந்தார்.

இன்று இந்தியாவில் மட்டுமன்றி மலேஷியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் , பெரு, கொலம்பியா என ஆறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது redbus.com! இந்தியாவில் மட்டும் சுமார் எழுபதாயிரம் பஸ் ரூட்ஸ் இவர்களால் பயன்படுத்தப்படுகின்றன கிட்டத்தட்ட நூறு மில்லியன் டிக்கெட்ஸ் வருடத்திற்கு விற்கப்படுகின்றன. மிகச் சாதாரணமாக எழுந்த ஒரு கேள்விக்கு தீர்வு காண நினைத்து உருவான இந்த நிறுவனம் இன்று 750 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. எனவே, தேவைகளை தீர்த்து வைப்பது மட்டும் அல்ல, இப்படியொரு தேவை இருக்கின்றது ஆனால் யாரும் அந்த தேவையின் அவசியத்தினை இன்னும் உணரவில்லை என்பதையும் கண்டுபிடித்து அதற்கோர் தீர்வு காணுதலும் கூட ஒரு டாப் பிஸினஸாக மாறக்கூடும் என்பதற்கு இந்த redbus.in ஒரு மிகப்பெரிய சான்று,

Post a Comment

Previous Post Next Post