Noise Cancellation System(நொய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம்)

ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் கமெரா மற்றும் பிளாஷ் இடையே அல்லது முன்பக்கத்தின் நடுவில் சிறிய துளை இருக்கும் கவனித்துள்ளீர்களா? இந்த துளை என்ன வேலையை நிகழ்த்துகிறது? இந்த சிறிய துளையானது நொய்ஸ் கேன்சலிங் மைக்ரோ போன் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, சத்தம் நிறைந்த பகுதியில் இருக்கும் சமயம் நமது போனில் அழைப்பு வரலாம். அப்போது போனை எடுத்து பேசினால் மறுபக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவது சரியாகக் கேட்காது.

ஆனால், போனில் நொய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் இருப்பின் சிறப்பு ஓடியோ அமைப்பின் காரணமாக மறுபக்கம் நமது குரல் நல்ல முறையில் கேட்கும்.
ஐபோனில் ஒரு முதன்மை ஒலிவாங்கி மற்றும் இரண்டு இரண்டாம் நிலை ஒலிவாங்கிகள் என மொத்தம் மூன்று உள்ளது. முதன்மை ஒலிவாங்கி ஐபோனின் இடது பக்கத்தின் கீழே அமைந்திருக்கும். அதன் முதன்மையான வேலையே தொலைபேசி அழைப்பு கள் வரும்பொழுது ஒரு சத்தமான சூழலில் நீங்கள் அழைப் புகளை மேற்கொண்டாலும் கூட தேவையற்ற ஒலியை குறைப்பது தான். இரண்டாம் ஒலிவாங்கி ஆம்பியண்ட் ரூம் நொய்ஸ்தனை (சுற்றுப்புற அறை சத்தம்) எடுத்து கொள்கிறது. ஹெட்ஸெட் ஜக் அருகே உள்ள இரண்டாம் ஒலிவாங் கியானது முதன்மை மைக்ரோபோனில் லவுட்ஸ்பீக்கரை. செயல்படுத்தும் போது செயலில் இறங்கும். இரண்டாம் நிலை மைக்ரோபோன், முதன்மை ஒலிவாங் கியிலிருந்து சிக்னலைக் கழிப்பதன் மூலம் ஐபோனில் நொய்ஸ் கேன்சலிங் சுற்றமைப்பு வேலை செய்கிறது. மேலும், ஆம்பியண்ட் நொய்ஸ்தனை மட்டுமே அது பிக் செய்யும். அதே போல முதன்மை மைக் ஆனது ஆம்பியண்ட் நொய்ஸ் மற்றும் குரலை பிக் செய்கிறது.

Post a Comment

Previous Post Next Post